TCS நிறுவனத்தில் B.Tech பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை விளக்கம்!

0
TCS நிறுவனத்தில் B.Tech பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை விளக்கம்!
TCS நிறுவனத்தில் B.Tech பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை விளக்கம்!
TCS நிறுவனத்தில் B.Tech பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை விளக்கம்!

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தில் தற்போது B.Tech பட்டதாரிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

வேலை வாய்ப்பு

இந்தியாவில் கொரோனா 2ம் அலைத்தொற்று பாதிப்புகள் தற்போது ஓய்ந்திருக்க கூடிய சூழலில் பல்வேறு துறைகள் புதிய வளர்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக நோய் தொற்று காலத்தில் வீழ்ச்சியடைந்து வந்த பல்வேறு துறைகளும் ஆட்சேர்ப்பு செய்வதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனாவுக்கு பின்பாக வரலாறு காணாத எழுச்சி கண்டு வரும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் எந்தவித முன் அனுபவம் இல்லாத பட்டதாரிகளுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை அளிக்க முன்வந்துள்ளது.

தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க காலஅவகாசம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

அந்த வகையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம், 2020-21 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற B.Tech பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்புகளை கொடுத்துள்ளது. TCS நிறுவனத்தில் இந்த காலியிடங்கள் அனைத்தும் ஆப் கேம்பஸ் மூலம் நிரப்பப்பட இருக்கிறது. அதாவது, கடந்த செப்டம்பர் மாதத்தில் TCS நிறுவனம் நடத்திய ஆப் கேம்பஸ் பணியமர்த்தலுக்கு கிடைத்த வரவேற்பு அமோகமாக இருந்ததன் அடிப்படையில் அதன் இரண்டாம் கட்ட பணியமர்த்தலுக்கான விண்ணப்பங்களை இந்நிறுவனம் வரவேற்றுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:

டிசம்பர் 15

தகுதிகள்:
  • BE, BTech, ME, MTech, MCA, MSc ஆகிய பட்டப்படிப்பில் தேர்ச்சி.
  • டென்ட், இன்டர், டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பு ஆகிய அனைத்துப் பாடங்களிலும் 60% அல்லது 6 CGPA மதிப்பெண் கட்டாயம்.
  • முழு நேர படிப்புகளை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
  • பகுதி நேர மற்றும் கடிதப் படிப்புகள் படித்தவர்கள் தகுதியற்றவர்கள்.
வயது வரம்பு:

18 முதல் 28 வயது வரை

பணி அனுபவம்:

இரண்டு ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:

பகுதி A – அறிவாற்றல் திறன் குறித்த இரண்டு மணிநேர தேர்வு. இதில் எண் திறன், வாய்மொழி திறன் மற்றும் பகுத்தறியும் திறன் பற்றிய கேள்விகள் கேட்கப்படும்.

பகுதி B – நிரலாக்கம் தொடர்பான மூன்று மணிநேர தேர்வு. இதில் புரோகிராமிங் லாஜிக் மற்றும் கோடிங் பிரிவு தொடர்பான கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்ப முறை:
  • TCS ஆப் கேம்பஸ் டிரைவிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tcs.com/careers/tcs-off-campus-hiring என்ற இணைப்பைத் திறக்கவும்.
  • முகப்புப் பக்கத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் படித்துவிட்டு TCS போர்ட்டல் இணைப்பை கிளிக் செய்யவும்.

தமிழகத்தில் நாளை (டிச.9) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

  • பிறகு Register Now என்பதைக் கிளிக் செய்யவும்.
  • பின்னர் IT ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • விண்ணப்பதாரர்கள் கேட்கப்பட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
  • விண்ணப்ப நிலையை சரிபார்க்க, உங்கள் விண்ணப்பத்தைக் கண்காணிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது விண்ணப்ப செயல்முறை வெற்றிகரமாக முடிந்தது.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!