TCS நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் – முக்கிய விவரங்கள் இங்கே!

0
TCS நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் - முக்கிய விவரங்கள் இங்கே!
TCS நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் - முக்கிய விவரங்கள் இங்கே!
TCS நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் – முக்கிய விவரங்கள் இங்கே!

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தனது நிறுவனத்தில் பிசினஸ் ப்ராசஸ் சர்வீசஸ் (பிபிஎஸ்) பணிக்கு சமீபத்தில் பட்டம் பெற்றவர்களை நியமிக்க, அவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. கலை, வணிகம் மற்றும் அறிவியல் படிப்புகளில் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TCS வேலைவாய்ப்பு:

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தில் பிசினஸ் ப்ராசஸ் சர்வீசஸுக்கு (பிபிஎஸ்) பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்கள் முதலில் பயிற்சியாளர்களாக பணியமர்த்தப்படுவார்கள். அறிவாற்றல் வணிக செயல்பாடுகள் (CBO), வங்கி மற்றும் நிதிச் சேவைகள் மற்றும் காப்பீடு (BFSI) மற்றும் ஆயுள் அறிவியல் தொடர்பான பணிகளில் சிறப்பாக பணியாற்றும் நபர்கள் உடனடியான பணியமர்த்தப்படுவார்கள்.

தகுதிகள்:

BPS வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பி.காம், பிஏ, பிபிஏ, பிசிஎஸ், பிசிஏ போன்ற படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். 2022 இல் பட்டப்படிப்பை முடித்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

முக்கிய தேதிகள்:

டிசிஎஸ் முன்னதாகவே விண்ணப்ப செயல்முறையைத் தொடங்கி விட்டது. இதற்கு விண்ணப்பதாரர்கள் tcs.com/careers என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். பணி நியமனத்துக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 7. எழுத்துத் தேர்வு ஜனவரி 26-ம் தேதி நடைபெறும்.

நியமனம்:

விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பதாரர்கள் எண் திறன், வாய்மொழி திறன் மற்றும் பகுத்தறியும் திறன் போன்ற சோதனைகளுக்கான தேர்வை எழுத வேண்டும். எழுத்துத் தேர்விற்கு 60 நிமிடங்கள் அவகாசம் அளிக்கப்படும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு நேர்காணல் தேதியை டிசிஎஸ் அறிவிக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா? சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

விண்ணப்பிக்கும் முறை:

முதலில், விண்ணப்பதாரர்கள் TCS இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://nextstep.tcs.com/campus/#/க்கு செல்ல வேண்டும்.

முதல் முறையாக விண்ணப்பிப்பவர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏற்கனவே பதிவு செய்தவர்கள், நேரடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

முதல் முறையாக விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க தனிப்பட்ட மற்றும் கல்வி விவரங்களை உள்ளிட வேண்டும். தேவையான அனைத்து அசல் ஆவணங்களின் டிஜிட்டல் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!