TCS நிறுவனத்தில் BE, ME & B.Tech பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – தகுதி, வயது வரம்பு விளக்கம்!

0
TCS நிறுவனத்தில் BE, ME & B.Tech பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - தகுதி, வயது வரம்பு விளக்கம்!
TCS நிறுவனத்தில் BE, ME & B.Tech பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - தகுதி, வயது வரம்பு விளக்கம்!
TCS நிறுவனத்தில் BE, ME & B.Tech பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – தகுதி, வயது வரம்பு விளக்கம்!

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் தனது அலுவலகங்களில் புதிய பட்டதாரிகளை பணியமர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த பணிக்கான தகுதிகள், விண்ணப்ப முறை குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.

வேலை வாய்ப்புகள்

இந்தியாவில் கொரோனா நோய் தொற்று சூழலுக்கு மத்தியில் பல்வேறு நிறுவனங்கள் புதிய ஆட்சேர்ப்பு வேலைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2022ம் நிதியாண்டிற்கு முன்பாக சுமார் 1 லட்சம் புதியவர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்க இருப்பதாக அறிவித்துள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) இதில் கிட்டத்தட்ட 75% பணிகளை முடித்துள்ளது. இதனுடன் இந்நிறுவனம் புதிய பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் மீண்டும் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!

அந்த வகையில் TCS நிறுவனம், தற்போது 2020, 2021ம் ஆண்டுகளில் படித்து முடித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க முன்வந்துள்ளது. குறிப்பாக வணிக செயல்முறை சேவைகள் மற்றும் தொழில்நுட்ப சேவைகளுக்கு TCS நிறுவனத்தில் காலியிடங்கள் ஏற்பட்டுள்ளது. இப்போது விண்ணப்பங்களை செலுத்துவதற்கான கடைசி தேதி வெளியிடப்படவில்லை. என்றாலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு தேவையான கல்வித்தகுதிகள், விண்ணப்ப முறை உள்ளிட்ட விவரங்களை நாம் விரிவாக காணலாம்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் BE, ME, BTech, MTech, MCA, MSc போன்ற பட்டப்படிப்புகளில் எதாவது ஒன்றை நிறைவு செய்திருக்க வேண்டும்.
மேலும் 10, 12ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் முதுகலை படிப்புகளில் விண்ணப்பதாரர்களின் மொத்த மதிப்பெண்கள் 60 சதவீதமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக 2020, 2021களில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

அனுபவம்:

இரண்டு ஆண்டுகள்

விண்ணப்ப முறை:
  • TCS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பங்களை செலுத்தலாம்.
  • அதன் படி, முதலாவதாக IT பிரிவை தேர்வு செய்ய வேண்டும்.
  • பிறகு படிவத்தை பூர்த்தி செய்து பதிவு செய்யவும்.
  • இப்போது நீங்கள் வெற்றிகரமாக பதிவு செய்திருந்தால் Applied for Drive என்று காட்டும்.
தேர்வு செயல்முறை:
  • எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் போன்ற 2 தேர்வுகள் நடத்தப்படும்.
  • இதில் எழுத்துத் தேர்வுகள், பகுதி A மற்றும் பகுதி B என 2 தேர்வுகளாக நடத்தப்படும்.
  • இதில் பகுதி Aல் அறிவாற்றல் திறன் கேள்விகள் கேட்கப்படும்.
  • பகுதி B நிரலாக்க திறன் சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்படும்.
  • இந்த தேர்வுகளுக்கான கால அளவு 120 மற்றும் 180 நிமிடங்கள் ஆகும்.
  • இது தொடர்பான மேலும் விவரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது ஹெல்ப்லைன் எண் 18002093111 மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!