TCS நிறுவனத்தில் BA & B.Sc பட்டதாரிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தற்போது 2020, 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை TCS நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, விண்ணப்ப செயல்முறை உள்ளிட்ட விவரங்களை இப்பதிவில் காணலாம்.
IT வேலைவாய்ப்பு:
நாடு முழுவதும் கொரோனா பரவல் பாதிப்புகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் TCS உள்ளிட்ட முன்னணி IT நிறுவனங்கள் அலுவலகங்களை முழுமையாக திறக்க ஆலோசித்து வருகிறது. இதற்கிடையில் வேலைவாய்ப்பு நடவடிக்கைகளிலும் தனி கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான TCS இப்போது 2020, 2021 மற்றும் 2022 ம் ஆண்டுகளில் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – குடும்ப பென்சன் குறித்த முக்கிய அறிவிப்பு! அரசின் உத்தரவு!
அந்த வகையில் TCS நிறுவனத்தில் வேகமாக வளர்ந்து வரும் அலகுகளான அறிவாற்றல் வணிக செயல்பாடுகள் (CBO), வங்கி மற்றும் நிதி சேவைகள் மற்றும் காப்பீடு (BFSI) மற்றும் வாழ்க்கை அறிவியல் ஆகியவற்றிற்காக இந்த ஆட்சேர்ப்புகள் நடத்தப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் இந்த பணியமர்த்தலுக்கு விண்ணப்பிக்கலாம்.
Exams Daily Mobile App Download
மேலும் 3 மாதங்கள் வரை பணி அனுபவம் உள்ளவர்களும் தங்களது விண்ணப்பங்களை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர இந்த பணிகளில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முழுநேர வேலை மற்றும் சுழற்சி மாற்றங்களில் பணிபுரியும் விருப்பமும் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை:
எண் திறன், வாய்மொழித் திறன், பகுத்தறிவு திறன் ஆகியவை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். டிசிஎஸ் பிபிஎஸ் பணியமர்த்தல் தேர்வு தேதிகள் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடியில் தெரிவிக்கப்படும்.
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இருந்து முழுநேர கலை, வணிகம் மற்றும் அறிவியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் விண்ணப்பதாரர்கள் BCom, BA, BAF, BBI, BBA, BBM, BMS, BCA, BCS, BPharm, MPharm மற்றும் BSc (தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல்) ஆகியவற்றில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பதவி விவரங்கள்:
- காப்பீட்டு வங்கி.
- பயணம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல்.
- விற்பனை
- வாழ்க்கை அறிவியல் மற்றும் சுகாதாரம்.
- ஊடகம் மற்றும் தகவல் அறிவியல்.
- தொலைத் தொடர்பு.
விண்ணப்ப முறை:
- டிசிஎஸ் நெக்ஸ்ட் ஸ்டெப் போர்ட்டலில் விண்ணப்பப் படிவத்தை பதிவு செய்து பூர்த்தி செய்யவும். விண்ணப்பத்தின் நிலை ‘விண்ணப்பம் பெறப்பட்டது’ என தோன்ற வேண்டும்.
- இந்த இணையதளத்தில் ஐடி வைத்திருப்பவர்கள் டிசிஎஸ் நெக்ஸ்ட் ஸ்டெப் போர்ட்டலில் லாக் ஆன் செய்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யலாம்.
- புதிய பயனர்கள் TCS நெக்ஸ்ட் ஸ்டெப் போர்ட்டலில் உள்நுழைந்து, ‘இப்போது பதிவு செய்யுங்கள்’ என்பதைக் கிளிக் செய்து, ‘BPS’ என வகையை தேர்வு செய்யவும்.
- பின்னர் அவர்களின் விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம்.