TCS, Infosys & HCL நிறுவனத்தில் 1.35 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – 2023ம் நிதியாண்டில் திட்டம்!

0
TCS, Infosys & HCL நிறுவனத்தில் 1.35 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - 2023ம் நிதியாண்டில் திட்டம்!
TCS, Infosys & HCL நிறுவனத்தில் 1.35 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - 2023ம் நிதியாண்டில் திட்டம்!
TCS, Infosys & HCL நிறுவனத்தில் 1.35 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – 2023ம் நிதியாண்டில் திட்டம்!

சமீப காலமாக ஐடி துறைகளில் அதிகளவு அட்ரிஷன் விகிதங்கள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் எச்சிஎல் ஆகிய நிறுவனங்கள் கடந்த 12 மாதங்களில் சுமார் 2,00,000 ஊழியர்களை பணியமர்த்தி சாதனை நிகழ்த்தி இருக்கிறது.

வேலை வாய்ப்புகள்

இந்தியாவில் உள்ள முதல் மூன்று முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் HCL Tech ஆகியவை 2022ம் நிதியாண்டில் கூடுதலாக 1.97 லட்சம் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. மேலும் இந்த வருடத்தில் சுமார் 2.08 லட்சம் புதியவர்களை அந்த நிறுவனங்கள் சேர்த்துள்ளன. இப்போது IT நிறுவனங்களுக்கான தேவைகள் அதிகரித்துக் கொண்டே செல்லும் போதும், தேய்மானத்தின் பின்னணியில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது வல்லுநர்கள் மற்றும் நிர்வாகிகளின் கூற்றுப்படி, இந்த நிதியாண்டின் இரண்டாம் பாதியில் இந்த தேய்மானம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் அதிகரித்து வரும் அட்ரிஷன் விகிதம் ஐடி நிறுவனங்களுக்கு பெரும் கவலையாக உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் 8.6% ஆகவும், டிசம்பர் 2021 காலாண்டில் 11.9% ஆகவும் இருந்து மார்ச் 2022 காலாண்டில் TCS நிறுவனத்தின் தேய்மானம் 17.4% ஆக உயர்ந்துள்ளது. அதே போல மார்ச் 2022 காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தேய்மானம் 27.7% ஆக இருந்தது. இது ஆண்டின் தொடக்கத்தில் 13.9% ஆக இருந்தது. அதே போல HCL தொழில்நுட்ப நிறுவனத்தை பொறுத்தவரை, ஆண்டின் தொடக்கத்தில் 11.8% ஆக இருந்த தேய்மானம் மார்ச் 2022 காலாண்டில் 21.8% ஆக உயர்ந்தது.

தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – அரசு வெளியீடு!

இது குறித்து இன்ஃபோசிஸ் நிதித் தலைவர் நிலஞ்சன் ராய் கருத்துப்படி, அடுத்த ஆண்டில் அதிக புதியவர்கள் பணிக்கு வருவார்கள் என்பதால் தேய்மானம் குறையும் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் கடந்த நிதியண்டில் டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை முறையே 100,000 மற்றும் 85,000 பேரை வேலைக்கு அமர்த்தியது. HCL நிறுவனத்தை பொறுத்தவரை முந்தைய ஆண்டில் பணியமர்த்தப்பட்ட 12,000 புதியவர்களைக் காட்டிலும் இப்போது இந்த எண்ணிக்கை 23,000 ஆக அதிகரித்துள்ளது. இப்போது அடுத்து வரவிருக்கும் 2023 ஆம் ஆண்டில், இந்த நிறுவனங்கள் வளாகங்களில் இருந்து 1.35 லட்சம் மாணவர்களை வேலைக்கு அமர்த்தும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here