TCS & Infosys நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – வீட்டிலிருந்து தொடரும் (WHF) வேலை முறை?

0
TCS & Infosys நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு - வீட்டிலிருந்து தொடரும் (WHF) வேலை முறை?
TCS & Infosys நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு - வீட்டிலிருந்து தொடரும் (WHF) வேலை முறை?
TCS & Infosys நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – வீட்டிலிருந்து தொடரும் (WHF) வேலை முறை?

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புகளுக்கு மத்தியில் TCS, இன்போசிஸ் உள்ளிட்ட முன்னணி IT நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை மீண்டுமாக WHF முறையை பின்பற்ற அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

WHF முறை:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் இன்னும் அதிகரித்து வரும் நிலையில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை கலப்பின வேலை மாதிரிகளை தொடர திட்டமிட்டு வருகின்றன. இப்போது, அதே போன்ற முறையை மற்ற ஐடி நிறுவனங்களும் பின்பற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதற்கு முன்பாக சில நிறுவனங்கள் தங்களது அலுவலகங்களைத் திறந்து ஊழியர்களை கட்டாயமாக அலுவலகங்களுக்கு அழைத்தன.

TN Job “FB  Group” Join Now

ஆனால் இப்போது அதிகரித்து வரும் கொரோனா வழக்குகளை கருத்தில் கொண்டு ஊழியர்களை மீண்டும் வீட்டிலிருந்து வேலையை தொடங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் சமீபத்தில் வெளிவந்துள்ள சுகாதார அமைச்சக தரவுகளின்படி, இந்தியாவில் ஒரே நாளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இறப்பு எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளன. இந்த சூழலில் இந்தியாவில் உள்ள முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நீண்ட காலத்திற்கு பணிபுரியும் ஹைப்ரிட் மாடலை தொடர முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகளில் 5 சதவீதம் பேர் மட்டுமே தற்போது அலுவலகத்திற்கு செல்கின்றனர். இதற்கிடையில் டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அவ்வப்போது இயக்க மண்டலங்கள் (OOZs) மற்றும் ஹாட் டெஸ்க்களை அமைக்கவும், 25×25 கொள்கையை செயல்படுத்துவதாகவும் அறிவித்துள்ளது. இந்த 25×25 கொள்கையின் கீழ், மொத்த ஊழியர்களில் 25 சதவீதத்திற்கு மேல் எந்த நேரத்திலும் அலுவலகத்தில் இருந்து பணிபுரிய வேண்டிய அவசியம் இல்லை. அதே போல இன்ஃபோசிஸ் நிறுவனமும் வாடிக்கையாளர்கள், ஒழுங்குமுறைச் சூழல் ஆகியவற்றை பொறுத்து ஹைப்ரிட் மாடல் வேலைக்கான நீண்ட காலத் திட்டத்தையும் அறிவித்துள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில் மக்களுக்கான புதிய வசதி – அரசின் முடிவு!

இந்த நடவடிக்கை ஒரு கட்ட அணுகுமுறையாக இருக்கும் என்றும் ஒவ்வொரு காலாண்டிலும் அதை மதிப்பாய்வு செய்வதாகவும் இன்போசிஸ் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிறுவனத்தின் 95 சதவீத பணியாளர்கள் தற்போது வீட்டில் பணிபுரிந்து வருவதாகவும், 5 சதவீத மூத்த நிர்வாகிகள் மட்டுமே அலுவலகங்களுக்கு வருகை தருவதாகவும் இன்ஃபோசிஸ் தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் தெரிவித்துள்ளார். அதே போல HCL டெக்னாலஜிஸ் நிறுவனம் தனது வணிக இயல்பு நிலையை பராமரிக்க உறுதிபூண்டுள்ளதாகவும், அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தடையில்லா சேவைகளை உறுதி செய்ய ஹைப்ரிட் மாதிரியில் தொடர்ந்து செயல்படுவதாகவும் கூறியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!