TCS நிறுவனத்தின் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் – பட்டதாரிகள் கவனத்திற்கு!

0
TCS நிறுவனத்தின் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் - பட்டதாரிகள் கவனத்திற்கு!
TCS நிறுவனத்தின் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் - பட்டதாரிகள் கவனத்திற்கு!
TCS நிறுவனத்தின் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் – பட்டதாரிகள் கவனத்திற்கு!

கொரோனா கால கட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் வேலை இல்லாமல் அவதிப்பட்டனர். தற்போது நோய் தொற்று கட்டுக்குள் வந்து உள்ளதால், அனைத்து துறைகளில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது TCS நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்:

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (TCS) என்பது இந்தியாவில் மும்பையை தலைமையிடமாகக் கொண்டுள்ள மென்பொருள் சேவைகள் வழங்கும் அறிவுரைச் சேவை நிறுவனமாகும். இது இந்தியாவின் பெரிய தகவல் தொழில்நுட்பம் மட்டும் அல்லாமல் வணிகச் செயலாக்க அயலாக்க சேவைகளையும் வழங்கும் நிறுவனமாகும். கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா எதிரொலி காரணமாக பல்வேறு தொழில் துறைகள் முடக்கப்பட்டு, பணியாளர்கள் சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டது. ஆனால் ஐடி துறை எந்த பாதிப்பும் இல்லாமல் இயங்கி வந்தது. மேலும் IT துறை பணியாளர்கள் WORK FROM HOME யில் வேலை பார்த்து வந்தனர்.

Exams Daily Mobile App Download

தற்போது ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் (National Career Service Centre for SC/ST) டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்துடன் இணைந்து இலவசமாக இளைஞர் வேலைவாய்ப்பு பயிற்சி முகாமை நடத்த இருக்கிறது. இப்பயிற்சியில் சேர்ந்து பயில்வதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து, துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி வெளியிட்ட செய்திக் குறிப்பில், இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் பிஏ/பிகாம்/பிசிஏ (2020-21-ல் தேர்ச்சி பெற்றிருத்தல்) & 2022-ல் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் ஆக இருத்தல் வேண்டும். மேலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த மாணவர்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

TNPSC Group 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு ..!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த மாணவர்கள் 28 வயதிற்கு கீழ் உள்ளவராக இருக்க வேண்டும். இந்த பயிற்சிக்கான காலம் 100 மணி ஆகும். அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, காலியிடங்கள் 50 ஆகும். மேலும் பயிற்சி முடித்தவுடன் அவர்களின் திறமைக்கு ஏற்ப வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய சுய விவரங்களுடன் கூடிய விண்ணப்பத்தை 10.05.22 அன்று காலை 11.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். இந்த வகையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை “மண்டல வேலைவாய்ப்பு உதவி அதிகாரி, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான மத்திய அரசின் தேசிய வாழ்க்கைத்தொழில் சேவை மையம், சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை 600 004, (வேலைவாய்ப்பு அலுவலக கட்டிடம், மூன்றாவது தளம்) என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு 044-24615112/ 8248962842 என்ற தொலைபேசி அல்லது செல்பேசியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!