TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்ப பதிவு – செப்.29 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

3
TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்ப பதிவு - செப்.29 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்ப பதிவு - செப்.29 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்ப பதிவு – செப்.29 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

இந்தியாவின் முன்னணி IT சேவை வழங்குநரான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் தனது ஆப் கேம்பஸ் பணியமர்த்தலுக்கான இயக்கத்தில் விண்ணப்பிக்க அளித்திருந்த கடைசி தேதியை இன்று (செப்டம்பர் 29) வரை நீட்டித்துள்ளது.

கால நீட்டிப்பு

இந்தியாவில் IT நிறுவன சேவைகளை வழங்குவதில் முதன்மை இடத்தை வகித்திருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் இம்மாத துவக்கத்தில் வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை கொடுத்திருந்தது. அந்த வகையில் TCS நிறுவனத்தில் ஆப் கேம்பஸ் வேலைவாய்ப்பு முறைக்கான விண்ணப்பங்களை செப்டம்பர் மாதம் 24ம் தேதி வரை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வேலைவாய்ப்பு இயக்கத்தில் பதிவு செய்வதற்கான கடைசி தேதியை இன்று (செப்டம்பர் 29) வரை நீட்டிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகை பிடிப்பவரா நீங்கள்? அப்போ 80% கொரோனா தாக்கும் – ஆய்வு முடிவுகள்!

அந்த வகையில் புதிய வேலைவாய்ப்புகளுக்கான தேர்வு அடுத்த மாதம் அதாவது அக்டோபரில் நடத்தப்பட இருக்கிறது. இந்த பணிக்கு, 2020-21 ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற B.E, B.Tech, M.E, M.Tech, MCA மற்றும் M.Sc பட்டதாரிகளை இந்நிறுவனம் தேடிக்கொண்டிருக்கிறது. இப்போது TCS ஆப் கேம்பஸ் பணியமர்த்தலுக்கான தகுதி அளவுகோல்களை பொறுத்தளவு, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் அனைத்து பாடங்களிலும் 60% அல்லது 6 CGPA மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் முதுகலை படிப்புகளை பெற்றிருக்க வேண்டும்.

தேனியில் நாளை (செப்.30) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இது தவிர விண்ணப்பதாரர்களுக்கு கல்வியில் இடைவெளிகள் இருந்தால், அதை கட்டாயமாக அறிவிக்க வேண்டும். மேலும் ஒட்டுமொத்த கல்வி இடைவெளி அதிகபட்சமாக 27 மாதங்களுக்குள் இருக்க வேண்டும். குறிப்பாக 2 வருடங்கள் வரை முன் பணி அனுபவம் உள்ள மாணவர்களும் TCS ஆப் கேம்பஸ் பணியமர்த்தல் செயல்முறைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

வயது:

TCS ஆப் கேம்பஸ் பணியமர்த்தல் செயல்முறையில் பங்கேற்பவர்கள் 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை:

  • எண் திறன் – 40 நிமிடங்கள்
  • வாய்மொழி திறன் – 30 நிமிடங்கள்
  • பகுத்தறிவு திறன் – 50 நிமிடங்கள்
PART B:
  • நிரலாக்க சோதனை – 15 நிமிடங்கள்
  • ஹேண்ட்-ஆன் குறியீடு – 45 நிமிடங்கள்

விண்ணப்ப முறை:

  • TCS அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குள் உள்நுழையவும்.
  • இப்போது ஆப் கேம்பஸ் பணியமர்த்தல் செயல்முறைக்கு பதிவு செய்து விண்ணப்பிக்கவும்
  • இந்த இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்த பயனராக நீங்கள் இருந்தால், லாகின் செய்து விண்ணப்பிக்கவும்.
  • இறுதியாக submit கொடுத்ததும் ‘‘Apply For Drive’ என்பதை கிளிக் செய்யவும்.
  • இப்போது புதிய பயனராக நீங்கள் இருந்தால், ‘Register Now’ என்பதை க்ளிக் செய்யவும்.
  • இதில் தேவையான IT வகையைத் தேர்ந்தெடுத்து உங்கள் விவரங்களை நிரப்பவும்.
  • விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்து, ‘Apply For Drive’ என்பதை கிளிக் செய்தால் விண்ணப்ப பதிவு முடிவடையும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!