வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு வரிவிலக்கு – மத்திய நிதியமைச்சர் விளக்கம்!!

0
வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு வரிவிலக்கு - மத்திய நிதியமைச்சர் விளக்கம்!!
வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு வரிவிலக்கு - மத்திய நிதியமைச்சர் விளக்கம்!!
வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு வரிவிலக்கு – மத்திய நிதியமைச்சர் விளக்கம்!!

வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். திரிணாமுல் கட்சி எம்பி சாட்டிய குற்றத்திற்கு தற்போது நிதி அமைச்சர் பதிலளித்துள்ளார்.

வரி விலக்கு:

மத்திய நிதியமைச்சர் இந்த மாதத்தின் முதல் நாள் அன்று சேமிப்பு வங்கிகளுக்கு வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் அதனை மீண்டும் நிர்மலா சீதாராமன் வாபஸ் பெற்றார். தற்போது அந்த வகையில் மேலும் ஓர் அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா, நிதி மசோதா குழப்பத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.

TN Job “FB  Group” Join Now

அதன்படி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு, ஓமான், கத்தார் ஆகிய வளைகுடா பகுதிகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு வரி விதிக்கப்படலாம் என்று குற்றம் சாட்டினார். தற்போது இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, 2021ம் ஆண்டின் நிதி சட்டத்தில் வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு புதிய வரி அல்லது கூடுதல் வரி என்று எதுவும் விதிக்கப்படவில்லை.

தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை – முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை!!

வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்களுக்கு தொடர்ந்து வரி விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் எதிர்க்கட்சி எம்பி கூறிய கருத்துக்கு, உண்மையை புரிந்து கொள்ளாமல் முடிவுக்கு வருவது வருத்தமளிக்கிறது என்றும் பதிலளித்துள்ளார். தற்போது இந்த தகவலினால் வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here