மதுரை மாவட்ட பெண்களுக்கு நல்ல சான்ஸ்.. நவ.15 வேலைவாய்ப்பு முகாம் – மாதம் ரூ.15,000 சம்பளம்!

0
மதுரை மாவட்ட பெண்களுக்கு நல்ல சான்ஸ்.. நவ.15 வேலைவாய்ப்பு முகாம் - மாதம் ரூ.15,000 சம்பளம்!
மதுரை மாவட்ட பெண்களுக்கு நல்ல சான்ஸ்.. நவ.15 வேலைவாய்ப்பு முகாம் - மாதம் ரூ.15,000 சம்பளம்!
மதுரை மாவட்ட பெண்களுக்கு நல்ல சான்ஸ்.. நவ.15 வேலைவாய்ப்பு முகாம் – மாதம் ரூ.15,000 சம்பளம்!

மதுரை மாவட்டத்தில் பெண்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் நோக்குடன் வரும் 15ம் தேதி (செவ்வாய்க்கிழமை) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 12ம் வகுப்பு முடித்த பெண்கள் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்:

இந்தியாவின் பிரபல நிறுவனமான டாடா எலக்ட்ரானிக்ஸ் தங்களது நிறுவனத்தின் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியான ஆட்களை தேடி வருகிறது. அதன்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி அதில் திறமையானவர்களை தேர்வு செய்து பணி ஆணைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மதுரையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இந்த முகாமில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 20 வயதிற்குள் உள்ள பெண்கள் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1000க்கும் மேற்பட்ட நபர்களை இந்நிறுவனம் தேர்வு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. முகாமானது வரும் 15ம் தேதி கே. புதூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

50வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவி ஏற்பு – குடியரசுத் தலைவர் பதவிப்பிரமாணம்!

Exams Daily Mobile App Download

இந்த முகாமின் மூலம் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சியுடன் மாதம் ரூ. 15,000 ஊதியமாக வழங்கப்படும். அத்துடன் உணவு, தங்கும் இடம், போக்குவரத்து வசதி போன்றவை இலவசமாக அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க வருபவர்கள் தங்களின் அசல் கல்வி தகுதி சான்றிதழ்களை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!