தமிழகத்தில் 20% தீபாவளி போனஸ் – கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்குமா அரசு?!
தமிழகத்தில் டாஸ்மார்க் ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் வழங்குவது தொடர்பாக அமைச்சர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தீபாவளி போனஸ்:
தமிழக அரசு தனது அனைத்து துறைகளை சார்ந்த ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் மற்றும் அகவிலைப்படி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் டாஸ்மார்க் ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் முத்துசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 21 சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் தலா இரண்டு பேர் கலந்து கொண்டனர்.
நவ. 05 ஊதியத்துடன் விடுமுறை.. காரணம் இது தான்.. மாநில அரசு அறிவிப்பு!
மற்ற அரசு ஊழியர்களைப் போலவே தங்களுக்கும் 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமைச்சர் முத்துசாமி அவர்கள் டாஸ்மார்க் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்குவதற்கு உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டாஸ்மார்க் ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ் அளிக்க உள்ளதாக அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.