தமிழகத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல் – மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

0
தமிழகத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல் - மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல் - மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல் – மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 2 நாட்கள் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால் மதுபிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இப்போதிலிருந்தே மது பாட்டில்களை வாங்க முற்பட்டு வருகின்றனர்.

மதுக்கடை மூடல்:

இந்தியாவில் விடுதலைக்காக அரும்பாடுபட்ட தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் 1869 ம் ஆண்டு அக்டோபர் 2, குஜராத் மாநிலம் போர்பந்தரில் பிறந்தார். சிறு வயதில் இருந்தே தேசப்பற்று மிகுந்த இவர் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு பல போராட்டங்களை நடத்தினார். நாட்டின் விடுதலையில் இவரின் பங்கு இன்றியமையாதது .மேலும் ஒடுக்குமுறை, தீண்டாமை ஆகியவற்றுக்கு எதிராக குரல் கொடுத்த பெருமை இவரையே சாரும்.

இது மட்டும் தெரிஞ்சா போதும்.. ஆதார் அட்டை பற்றிய டென்ஷனே வேண்டாம் – எளிய வழிமுறைகள் இதோ!

அத்துடன் உலகிற்கு அகிம்சை, உண்மை உள்ளிட்ட பல்வேறு நற்பண்புகளையும் கற்று தந்தவர். நடப்பு ஆண்டு மகாத்மா காந்தியின் 154 வது பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது. இந்த புனித நாளில் காந்தியின் திரு உருவ படத்திற்கு தலைவர்கள், பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் என அனைவரும் மாலை அணிவித்து மரியாதையை செய்வர். மேலும் அக்டோபர் 2 ம் தேதி அரசு விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்த விடுமுறை தினத்தில் காந்தியின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் கூட்டங்கள், சொற்பொழிவுகள் நடத்தப்படும்.

Exams Daily Mobile App Download

அதனை தொடர்த்து காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில் வரும் அக்டோபர் 2ம் தேதி சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து இறைத்தூதர் முகமது நபி அவர்களின் பிறந்த தினமான அக்.9 ஆம் தேதி மிலாடி நபியை முன்னிட்டும் டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!