தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் – அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!

0
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் - அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் - அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் – அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் மது அருந்திவிட்டு பாட்டில்களை அப்பகுதிகளிலே தூக்கி எரிந்து விடுகின்றனர். இதனால் வன உயிரினங்களுக்கு அதிகமான பாதிப்பும் அத்துடன் ஏராளமான உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

டாஸ்மாக் கடைகள்:

தமிழகத்தில் தற்போது கோடைகாலம் என்பதால் பொதுமக்கள் மலைப்பகுதிகளான ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்வது வழக்கமாக உள்ளது. இந்த இடங்களில் பெரும்பாலும் மது அருந்துபவர்கள் மது அருந்தி விட்டு அங்குள்ள காட்டு பகுதிகளுக்குள் பாட்டில்களை தூக்கி எரிந்து விடுகின்றனர். இதனால் காட்டுப் பகுதிகளில் வலம் வரும் வனவாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் மது பாட்டில்களை யானை மிதிக்கும் போது அது உடைந்து காலில் குத்தினால் அதற்கு புண் ஏற்பட்டதுடன் சீழ் வைத்து ஒரு சில மாதங்களில் உயிரிழக்க நேரிடும்.

ஆட்டோ, டாக்சி, பேருந்து கட்டணங்கள் உயர்வு – மே 1 முதல் அமல்! மாநில அரசு அறிவிப்பு!

மேலும் மார்ச் 15 ஆம் தேதி வரையிலான 75 நாட்களில் மட்டும் 30 யானைகள் உயிரிழந்துள்ளதாக ஆய்வுகளில் கூறப்படுகிறது. அத்துடன் இதற்கு மது பாட்டில்கள் மட்டும் ஒரு காரணம் அன்று. மேலும் பல காரணங்கள் உள்ளது. ஆனாலும் வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். அதனால் மது பாட்டில்கள் காட்டு பகுதிகளில் வீசப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசிடம் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். மேலும் இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் அவர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல், அரசாணை வெளியீடு? அரசு சார்பு செயலாளர் விளக்கம்!

இவர் தனது அறிக்கையில் கூறியதாவது, தமிழகத்தில் காட்டுப் பகுதிகளில் காலி பாட்டில்கள் வீசப்படுவதை தடுக்க வேண்டும். இதற்கு ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் உள்ள மதுக்கடைகளை மூடுவது தான் சரியான முடிவாக இருக்கும் என்று கூறியுள்ளார். அத்துடன் இதனால் அரசுக்கு பெரும் இழப்பும் இருக்காது. அதனால் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளிலும் மற்றும் சத்தியமங்கலம் உள்ளிட்ட வனப்பகுதிகளிலும் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!