தமிழகத்தில் ரூ.460 கோடியை தாண்டிய மதுபான விற்பனை – மண்டல வாரியாக தகவல்!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதுபான விற்பனை நிலவரம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மதுபான விற்பனை:
தமிழகத்தில் மதுபானம் அரசு கட்டுப்பாட்டின் கீழ் டாஸ்மார்க் நிறுவனங்களின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முக்கிய பண்டிகை தினங்களில் வழக்கத்தை விட டாஸ்மார்க் கடைகளில் மதுபான விற்பனை அதிக அளவில் விற்பனை செய்யப்படும். தமிழகத்தில் டாஸ்மார்க் வருமானம் தான் அதிகபட்ச வருமானம் என்ற குற்றச்சாட்டுகளும் நிலவி வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்களும் தமிழகத்தில் மொத்தம் 467.69 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி முடிந்தது.. தங்கத்தின் விலை சரிவு – சவரன் ரூ.44,720க்கு விற்பனை!!!
மேலும் மண்டல வாரியாக மதுபான விற்பனை விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 104.7 கோடியும், சென்னை மண்டலத்தில் ரூபாய் 101.1 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூபாய் 95.62 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூபாய் 84.4 கோடிக்கும் மதுபான விற்பனை நடைபெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.