ரூ 25,000/- ஊதியத்தில் TANUVAS தமிழக பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

0

ரூ 25,000/- ஊதியத்தில் TANUVAS தமிழக பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Lab Maintenance Assistant பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் Lab Maintenance Assistant பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே நிரப்புவதற்காக ஒதுக்கியுள்ளது.
  • இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI / Diploma தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் ITI முடித்திருந்தால் குறைந்தது 10 ஆண்டுகள் / Diploma முடித்திருந்தால் குறைந்தது 05 ஆண்டுகள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் முன் அனுபவம் பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • இப்பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் ஊதியமாக மாதம் ரூ.25,000/- பெறுவார்கள். மேலும் இத்துடன் வழங்கப்படும் கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கலாம்.
  • இப்பணிக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய தேர்வு செயல் முறைகளின் வாயிலாக தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 01.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!