தமிழக மின்வாரியத்தில் 56,000 காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

0
தமிழக மின்வாரியத்தில் 56,000 காலிப்பணியிடங்கள் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழக மின்வாரியத்தில் 56,000 காலிப்பணியிடங்கள் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழக மின்வாரியத்தில் 56,000 காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள 56 ஆயிரம் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்து உள்ளார். தற்போது இருக்கும் பணியாளர்களை கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

மின்துறை பணியிடங்கள்:

தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி எவ்வித தொய்வும் இன்றி பணிகளை முடிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மின்சாரத்துறை அமைச்சர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் சில தகவல்களை வெளியிட்டு உள்ளார். அவர் பேசுகையில், மின்வாரியத்தில் 1.46 லட்சம் பணியிடங்கள் உள்ளன. இதில் 56,000 பணியிடங்கள் காலியாக உள்ளது. இவை விரைவில் நிரப்பப்படும். தற்போதைக்கு உள்ள ஊழியர்களை வைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

8 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.16,000/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !

தற்போது அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்த அமைச்சர் நேரடியாக கணக்கீடு எடுக்கும் பணிக்கு 50% ஊழியர்கள் மட்டுமே உள்ளதாக கூறினார். மின்துறையின் 9498794987 எண் வாயிலாக புகார்கள் பெறப்பட்டு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவது குறித்தும் அமைச்சர் பேசினார். இதனிடையே மின்துறை காலிப்பணியிடங்கள் குறித்து அமைச்சர் கூறி இருப்பது இளைஞர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – செப்.15 அறிக்கை தாக்கல்!

எனவே இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியம், அரசுப்பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்டவை சார்பில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு விண்ணப்ப பதிவு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!