ஆதார் எண்கள் மின்நுகர்வோர் எண்களுடன் இணைப்பு – மத்திய அரசு அறிவுறுத்தல்!

0
ஆதார் எண்கள் மின்நுகர்வோர் எண்களுடன் இணைப்பு - மத்திய அரசு அறிவுறுத்தல்!
ஆதார் எண்கள் மின்நுகர்வோர் எண்களுடன் இணைப்பு - மத்திய அரசு அறிவுறுத்தல்!
ஆதார் எண்கள் மின்நுகர்வோர் எண்களுடன் இணைப்பு – மத்திய அரசு அறிவுறுத்தல்!

ஆதார் எண்களை மற்ற அனைத்து வகையான ஆவணங்களுடன் இணைக்க மத்திய அரசு முன்னதாக அறிவுறுத்தியுள்ள நிலையில், தற்போது மின்வாரிய நுகர்வோர் எண்களை ஆதார் எண்ணுடன் இணைக்க அறிவித்துள்ளது.

மத்திய அரசு அறிவிப்பு:

நாட்டின் முக்கிய அடையாள ஆவணமாக கருதப்படும் ஆதார் அட்டையுடன், மக்களின் அனைத்து வகையான மற்ற ஆவணங்களும் இணைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு முன்னதாக அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, கேஸ் நுகர்வோர் எண், வங்கி கணக்கு எண், பான் கார்டு, ரேஷன் அட்டை, பாஸ் போர்ட், வாக்காளர் அட்டை போன்ற அனைத்து ஆவணங்களோடும் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

மேலும், எந்த வித புது ஆவணங்களை பெறும் போதும் ஆதாரில் உள்ள விவரங்களின் அடிப்படையிலேயே கொடுக்கப்படுகிறது. எனவே ஆதாரை எப்போதும் அப்டேட் செய்து வைத்துக்கொள்வது நல்லது.இந்நிலையில், தற்போது மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, Tangedco-ன் மின் நுகர்வோர் எண்களை ஆதரவுடன் இணைக்க புதிதாக வலியுறுத்துகிறது.

மக்களுக்கு எச்சரிக்கை – உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் வருகிற 20ம் தேதி வரை மழை!

Exams Daily Mobile App Download

மின் நுகர்வோர் எண்களை ஆதாருடன் இணைப்பதன் மூலம் அரசு வழங்கும் மானியங்கள் முறையாகவும்,சீராகவும் கண்காணிக்கப்பட ஏதுவாக இருக்கும் என்றும், இதனை மக்கள் www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் செய்து கொள்ளலாம் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த செயல்முறையை செய்தவர்களுக்கு மட்டுமே மத்திய அரசு வழங்கும் புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தின் கீழான நிதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!