TANCET தேர்வு 2022: ஸ்கோர் கார்டு பதிவிறக்கம் ஜூன் 15க்கு ஒத்திவைப்பு! முழு விவரம் இதோ!

0
TANCET தேர்வு 2022: ஸ்கோர் கார்டு பதிவிறக்கம் ஜூன் 15க்கு ஒத்திவைப்பு! முழு விவரம் இதோ!
TANCET தேர்வு 2022: ஸ்கோர் கார்டு பதிவிறக்கம் ஜூன் 15க்கு ஒத்திவைப்பு! முழு விவரம் இதோ!
TANCET தேர்வு 2022: ஸ்கோர் கார்டு பதிவிறக்கம் ஜூன் 15க்கு ஒத்திவைப்பு! முழு விவரம் இதோ!

கடந்த 9ம் தேதியன்று வெளியிடப்பட்ட TANCET MBA 2022 தேர்வுக்கான ஸ்கோர்கார்டுகளை பதிவிறக்கம் செய்வதற்கான தேதியானது ஜூன் 15க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கோர்கார்டை பதிவிறக்கம் செய்வதற்கு தேவையான முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

ஸ்கோர்கார்டு பதிவிறக்கம்:

தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு (TANCET) என்பது தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளிலும் உள்ள முதுநிலைப் பட்டபடிப்புகளுக்கான சேர்க்கை தேர்வாகும். இத்தேர்வை ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற TANCET தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலை வெளியிடுவதை வரும் ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் மதிப்பெண் பட்டியல் வெளியான பிறகு தேர்வர்கள் ஜூன் 30 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான tancet.annauniv.edu லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – தேர்வர்கள் கவனத்திற்கு!

இதற்கு முன்னதாக அண்ணா பல்கலைக்கழகம் ஜூன் 9 அன்று TANCET 2022 முடிவை அறிவித்து, மதிப்பெண் அட்டையை ஜூன் 10ம் தேதி வெளியிட இருப்பதாக தெரிவித்தது. ஆனால், இத்தேர்வில் சிறு திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று பல மாணவர்கள் அணுகி வருவதால், இறுதி மதிப்பெண் அட்டைக்கான தேதி தற்போது ஜூன் 15க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. TANCET 2022ன் இறுதி மதிப்பெண் அட்டை கவுன்சிலிங் செயல்முறையின் போதும், சேர்க்கைகையிலும் பிழையின்றி இருக்க வேண்டும். அதனால் TANCET தேர்வு முடிவுகளில் பிழைகள் உள்ள விண்ணப்பதாரர்கள் தகுந்த ஆதாரங்களுடன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் அவற்றைத் திருத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இப்போது புகைப்படம் அல்லது கையொப்பச் சிக்கல்கள் காரணமாக TANCET முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் அல்லது பதிவு எண்ணுடன் [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் சிக்கல்களைத் தீர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தவிர பெயரில் முதலெழுத்துக்கள், பிறந்த தேதி, பெயர் எழுத்துப்பிழை, பாலினம், நேட்டிவிட்டி, சமூக விவரங்களை சரியான ஆதாரங்களுடன் சமர்ப்பிப்பதன் மூலம் மாற்றிக் கொள்ளலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!