எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளுக்கான TANCET நுழைவு தேர்வு – அண்ணா பல்கலை மாணவர்கள் கவனத்திற்கு!
முதுகலை படிப்புகளான எம்.பி.ஏ, எம்.சி.ஏ பயில உள்ள மாணவர்களுக்கு நடத்தப்படும் டான்செட் நுழைவு தேர்வு பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுகளுக்கான தேதிகள் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
TANCET நுழைவு தேர்வு:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் மற்றும் அண்ணா பல்கலையின் கீழ் உள்ள கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு டான்செட் நுழைவு தேர்வு கட்டாயம் ஆக உள்ளது. இந்த நுழைவு தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தான் கலந்தாய்வின் மூலம் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
வரும் 2023ம் ஆண்டிற்கான டான்செட் தேர்வு வழக்கம் போல் பிப்ரவரி 25 மற்றும் 26ம் தேதிகளில் நடக்க இருக்கிறது. அதிலும், பிப்ரவரி 25ம் தேதி காலை எம்.சிஏ படிப்பிற்கான தேர்வும், மதியம் எம்டெக், எம்.இ, எம்.ஆர்க், எம்பிளான் போன்ற படிப்புகளுக்கான தேர்வுகளும் நடக்க உள்ளது.
சென்னை மெரினாவில் வரவுள்ள அசத்தல் திட்டம் – மாநகராட்சி முடிவு!
Exams Daily Mobile App Download
இதேபோல், பிப்ரவரி 26ம் தேதி எம்பிஏ படிப்புகளுக்கான நுழைவு தேர்வு நடக்க உள்ளது. தேர்வு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் அனைத்தும் www.annauniv.edu என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின் முடிவுகள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகான கவுன்சிலிங்கில் மாணவர்கள் தங்களின் விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்படும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்