TANCET 2023 – ஆன்லைன் பதிவு பிப்ரவரி 1 முதல் …! விண்ணப்பிக்கும் எளிய வழிமுறைகளுடன்…!

0
TANCET 2023 - ஆன்லைன் பதிவு பிப்ரவரி 1 முதல் ...! விண்ணப்பிக்கும் எளிய வழிமுறைகளுடன்...!
TANCET 2023 - ஆன்லைன் பதிவு பிப்ரவரி 1 முதல் ...! விண்ணப்பிக்கும் எளிய வழிமுறைகளுடன்...!
TANCET 2023 – ஆன்லைன் பதிவு பிப்ரவரி 1 முதல் …! விண்ணப்பிக்கும் எளிய வழிமுறைகளுடன்…!

அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கான (TANCET 2023) ஆன்லைன் பதிவு செயல்முறையை பிப்ரவரி 1, 2023 அன்று முதல் தொடங்கும் என தெரிவித்துள்ளது. விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு பிப்ரவரி 22 ஆகும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

TANCET 2023 விவரங்கள்:

TANCET MCA தேர்வு மார்ச் 25 ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், TANCET MBA தேர்வு மார்ச் 25 ஆம் தேதி மதியம் 2.30 மணி முதல் மாலை 04.30 மணி வரையிலும் நடைபெறும். CEETA – PG தேர்வு மார்ச் 26 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் (Bachelor’s Degree) முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் TANCET 2023 விண்ணப்பக் கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். SC/SCA/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆகும்.

LIC AAO 300 காலிப்பணியிடங்கள் – மாதம் ரூ.53600/- சம்பளம் || விண்ணப்பிக்க ஜனவரி 31 கடைசி நாள்

டான்செட் 2023: எப்படி விண்ணப்பிப்பது ?
  • https://tancet.annauniv.edu/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்
  • தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி ஆகியவற்றை நிரப்பவும்
  • புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றவும்
  • விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்
  • எதிர்கால குறிப்புக்காக பதிவிறக்கம் செய்து சேமிக்கவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!