TANCET 2022 தேர்வு முடிவுகள் வெளியீடு – முழு விவரங்கள் இதோ..!

0
TANCET 2022 தேர்வு முடிவுகள் வெளியீடு - முழு விவரங்கள் இதோ..!
TANCET 2022 தேர்வு முடிவுகள் வெளியீடு - முழு விவரங்கள் இதோ..!
TANCET 2022 தேர்வு முடிவுகள் வெளியீடு – முழு விவரங்கள் இதோ..!

அண்ணா பல்கலைக்கழகம் தற்போது 2022ம் ஆண்டுக்கான TANCET தேர்வு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் நடந்து முடிந்த TANCET 2022 தேர்வுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் தேர்வு முடிவுகள் மற்றும் முழு விவரங்களையும் பெற்று பயனடையலாம்.

TANCET 2022 – தேர்வு முடிவுகள் வெளியீடு:

அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) ஆனது ஆண்டுதோறும் அதன் கீழ் செயல்படும் கல்லூரி, கல்வி நிலையங்களில் முதுநிலை படிப்பு (MBA., MCA. and M.E / M.Tech. / M.Arch. / M.Plan. Degree Programmes) சேர்வதற்கான நுழைவுத் தேர்வை Tamil Nadu Common Entrance Test (TANCET) என்கிற பெயரில் நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான TANCET 2022 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. இதில் நுழைவு தேர்வுக்கு தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இதனை தொடர்ந்து 23.04.2022 ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

Exams Daily Mobile App Download

இந்த ஆண்டு TANCET 2022 தேர்வுக்கு அநேகர் விண்ணப்பித்துள்ள சூழலில், M.C.A படிப்புக்கு 14.05.2022 (Saturday) அன்று 10.00 AM மணி முதல் 12.00 NOON மணி வரை தேர்வு நடைபெற்றது. M.B.A படிப்புக்கு 14.05.2022 (Saturday) அன்று 2.30 PM மணி முதல் 4.30 PM மணி வரை தேர்வு நடைபெற்றது. M.E. / M.Tech. / M.Arch. / M.Plan படிப்புக்கு 15.05.2022 (Sunday) அன்று 10.00 AM மணி முதல் 12.00 PM மணி வரை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுகளில் மொத்தமாக 36,710 நபர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

நடந்து முடிந்த தேர்வுக்கு தற்போது அண்ணா பல்கலைக்கழகம் அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு TANCET தேர்வு எழுதிய தேர்வர்கள், இப்பதிவின் கீழுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களின் தேர்வு முடிவுகளை உடனே தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த தேர்வு முடிவுகளை (நாளை) 10.06.2022 ம் தேதி முதல் 30.06.2022 ம் தேதி வரை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து பயனடையலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Click Here to Check TANCET 2022 Exam Result

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!