விஜய் டிவி ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கோவத்தில் கோதை!

0
விஜய் டிவி 'தமிழும் சரஸ்வதியும்' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - கோவத்தில் கோதை!
விஜய் டிவி 'தமிழும் சரஸ்வதியும்' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - கோவத்தில் கோதை!
விஜய் டிவி ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கோவத்தில் கோதை!

விஜய் டிவியில் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் ஆரம்பத்தில் இருந்தே கோதையின் வெறுப்புக்கு மட்டுமே சரஸ்வதி ஆளாகி வருகிறார். தற்போது மீண்டும் கோதையிடம் கையும் களவுமாக மாட்டி கொண்டு தவிக்கும்படியான ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழும் சரஸ்வதியும்

விஜய் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தமிழும் சரஸ்வதியும் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. படிக்காத தமிழுக்கு படித்த பெண்ணை பார்த்து தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என குடும்பத்தினர்கள் விரும்புகிறார்கள். ஆனால், தமிழுக்கு சரஸ்வதி மீது காதல் வருகிறது. சரஸ்வதியும் படிக்காத காரணத்தினால் எப்படியும் குடும்பத்தினர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சரஸ்வதியை திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக படிக்காத சரஸ்வதியை எம்.பி.ஏ படித்தவர் என பொய் சொல்லி குடும்பத்தினர் அனைவரையும் நம்ப வைத்து தமிழ் சரஸ்வதியை திருமணம் செய்து கொள்கிறார்.

கோபிக்கு எதிராக திரும்பும் செழியன் – சீரியலில் புதிய திருப்பம்! ப்ரோமோ ரிலீஸ்!

திருமணத்திற்கு பிறகு சரஸ்வதி படிக்கவில்லை என்கிற உண்மை தமிழின் அம்மாவான கோதைக்கு தெரிய வந்து மிக பெரிய கலவரமாகி விடுகிறது. கோதைக்கு முழு உண்மையும் தெரிந்த பிறகு சரஸ்வதியை குடும்பத்தினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்பு, எப்படியாவது கோதையின் மனதில் இடம்பிடித்துவிட வேண்டும் என பிளான் செய்கிறார். சரஸ்வதி நினைத்தது போலவே பூஜை அறையில் விளக்கு ஏற்ற சரஸ்வதியை கோதை அனுமதிக்கிறார். இதுமட்டுமல்லாமல் சரஸ்வதிக்கு தாலி பிரித்து கோர்க்கும் சடங்கும் நடத்துகிறார்.

Exams Daily Mobile App Download

ஆனால், மீண்டும் தற்போது கோதை சரஸ்வதியின் மீது கொலை வெறியில் இருக்கிறார். இந்நிலையில், 10 நிமிடத்தில் 15 பர்கர் சாப்பிடும் போட்டியாளருக்கு ரூ.5,000 பரிசு தொகை என அறிவிக்கப்படுகிறது. இந்த பர்கர் சாப்பிடும் போட்டியில் சரஸ்வதி கலந்துகொண்டு வெற்றிபெறுகிறார். சரஸ்வதிக்கு பரிசு கொடுக்க கோதை தான் அங்கு வருகிறார். தன்னை பார்த்தால் அத்தை கோவமாகிவிடுவார் என பயந்து முகத்தை மறைத்து பரிசை வாங்கி தப்பிவிடுகிறார். ஆனால் கார்த்திக், சரஸ்வதி பர்கர் சாப்பிடும் போது எடுக்கப்பட்ட வீடியோவை கோதையிடம் காட்டி கோதையை கோவப்பட வைக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here