தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ் – அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! வானிலை அறிக்கை!

0
தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ் - அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! வானிலை அறிக்கை!
தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ் - அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! வானிலை அறிக்கை!
தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ் – அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! வானிலை அறிக்கை!

தமிழகத்தில் ஒரு பக்கம் வெயில் சுட்டெரித்து வந்தாலும் இன்னொரு பக்கம் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (மார்ச் 19) முதல் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில் மக்கள் பெரும் அவதியில் இருக்கின்றனர். இந்நிலையில் மக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் தற்போது அங்கங்கே மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருவதால் இன்று (மார்ச் 19) முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிஸ்லெரி நிறுவன பங்குகளை வாங்கும் திட்டத்தை கைவிட்ட டாடா நிறுவனம் – வெளியான அப்டேட்!

அதன் படி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளால் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், இந்த மழை மார்ச் 20, 21,22, 23 ஆகிய தேதிகளில் வரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!