தமிழகத்தில் இன்று (நவ. 17) 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வங்கக்கடல் பகுதிகளில் ‘மிதிலி’ புயலாக வலுப்பெற்றுள்ளது. அது தவிர தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று (நவ.17) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி மாத துவக்கத்திலேயே ரூ.1000 உரிமைத்தொகை – குடும்ப தலைவிகள் ஹாப்பி!!!
அதனை தொடர்ந்து நவ. 18 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசான மழை பெய்யக்கூடும். அதே போல நவ.19 மற்றும் நவ.20 ஆம் தேதிகளில் கடலோர தமிழகத்தில் அதாவது கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல நவ.17 ஆம் தேதி வடக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச கடலோரப்பகுதிகள், மேற்குவங்க கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.