தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

0
தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!!
தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!!
தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் சுட்டெரித்து வந்த நிலையில், தற்போது கடந்த சில நாட்களாக தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்து வெயிலின் தாக்கத்தை குறைத்து வருகிறது. மேலும், இன்றும், தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இடி, மின்னலுடன் கூடிய மழை:

கேரளா மற்றும்‌ அதனை ஓட்டிய பகுதிகளில்‌ 1 கிலோமீட்டர்‌ உயரத்தில்‌ நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி காரணமாக,

03.05.2021: மேற்கு தொடர்ச்‌சி மலை ஒட்டிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடியது முதல்‌ மிதமான மழையும்‌, தென்‌ தமிழக மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌, சேலம்‌, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய இலேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

CBSE 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை – கணித தாள் விதி கட்டாயமில்லை!!

04.05.2021,05.05.2021: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய இலேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

06.05.2021,07.05.2021: மேற்கு தொடர்ச்‌சி மலை ஒட்டிய மாவட்டங்கள்‌, உள்‌மாவட்டங்கள்‌ மற்றும்‌ கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய இலேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

TN Job “FB  Group” Join Now

கடலோர மாவட்டங்களில்‌ காற்றில்‌ ஒப்பு ஈரப்பதம்‌ 50 முதல்‌ 90 விழுக்காடு வரை உள்ளதால்‌ காற்றின்‌ இயல்பான வெப்பநிலையானது 4 முதல்‌ 5 டிகிரி செல்‌சியஸ்‌ வரை அதிகமாக உணரப்படும்‌. இதன்‌ காரணமாக மாலை முதல்‌ காலை வரை வெக்கையாகவும்‌, இயல்புக்கு மாறாக அதிகமாகவும்‌ வியர்க்கும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

காற்றில்‌ ஒப்பு ஈரப்பதம்‌ 50 முதல்‌ 90 விழுக்காடு வரை உள்ளதன்‌ காரணமாக மாலை முதல்‌ காலை வரை வெக்கையாகவும்‌, இயல்புக்கு மாறாக அதிகமாகவும்‌ வியர்க்கும்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!