தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!

0
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பீகார் முதல் தென் தமிழக கடலோர பகுதி வரை நிலவும் (1.0 கிலோமீட்டர் உயரம் வரை) வளிமண்டல சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் அறிக்கை:

தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்தாலும் சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பீகார் முதல் தென் தமிழக கடலோர பகுதிவரை நிலவும் (1.0 கிலோமீட்டர் உயரம் வரை) வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

26.04.2021, 27.04.2021:

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருநெல்வேலி, தென்காசி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

28.04.2021 முதல் 30.04.2021 வரை:

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி – முதல்வர் அறிவிப்பு!!

கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் (RH – Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

93வது ஆஸ்கர் விருதுகள் 2021 அறிவிப்பு – முழு விபரம்!!

காற்றில் ஒப்பு ஈரப்பதம் (RH – Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும் இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவாக நீலகிரி மாவட்டத்தில் தலா 3செ.மீ மழை பெய்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!