தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை கொட்டித்தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை கொட்டித்தீர்க்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை கொட்டித்தீர்க்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை கொட்டித்தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் அறிக்கை:

தமிழகத்தில் சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இருந்த போதிலும் தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

12.04.2021:

தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, திண்டுக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

13.04.2021:

தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாடு முழுவதும் ஒரே நாளில் 1.68 லட்சம் பேருக்கு கொரோனா – மத்திய சுகாதாரத்துறை அறிக்கை!!

14.04.2021:

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் , நீலகிரி கோயம்பத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், காற்றுடன் (30 முதல் 40 கிமீ வேகத்தில்) கனமழையும் பெய்யக்கூடும்.

15.04.2020:

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்பத்தூர், தேனிம் திண்டுக்கல், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் (30 முதல் 40 கி.மீ வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை – பள்ளிக்கல்வித்துறை அனுமதி!!

16.04.2021:

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் நீலகிரி, கோயம்பத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேர்தத்தில் அதிகபட்ச மழையாக கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் மதுரையில் தலா 4 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!