தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு தொடரும் கனமழை – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!

0
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு தொடரும் கனமழை - வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு தொடரும் கனமழை - வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு தொடரும் கனமழை – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வானிலை அறிக்கை:

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில்‌,

14.07.2021: நீலகிரி, கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல்‌, தென்காசி) மாவட்டங்கள்‌ மற்றும்‌ கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம்‌, திருப்பத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌
லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌.

TN Job “FB  Group” Join Now

15.07.2021, 16.07.2021: மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி) மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

17.07.2021, 18.07.2021: கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய உள்‌ மாவட்டங்கள்‌, புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை,

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌, நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இலேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌, அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்‌.

கடந்த 24 மணி நேரத்தில்‌ அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்‌):

சின்னக்கல்லார்‌ (கோவை) 9, பந்தலூர்‌ (நீலகிரி) 7, அவலாஞ்சி (நீலகிரி) 6, மேல்‌ பவானி (நீலகிரி) 5, வால்பாறை (கோவை) 4, பெரியாறு (தேனி) 3, பொள்ளாச்‌சி (கோவை) 2, சென்னை மாவட்டாச்‌சியர்‌ அலுவலகம்‌, புழல்‌ (திருவள்ளூர்‌), திருமூர்த்தி அணை (திருப்பூர்‌) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

வங்க கடல்‌ பகுதிகள்‌:

வங்க கடல்‌ பகுதிக்கான எச்சரிக்கை விலக்‌கிகொள்ளப்படுகிறது.

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

14.07.2021 முதல்‌ 16.07.2021 வரை: கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ லட்சத்தீவு பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடை இடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

14.07.2021 முதல்‌ 18.07.2021 வரை: தென்‌ மேற்கு அரபிக்கடல்‌, மத்திய அரபிக்கடல்‌ மற்றும்‌ வட கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மீனவர்கள்‌ மேற்குறிப்பிட்ட தேதிகளில்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here