தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

கிழக்கு திசை காற்றின் மாறுபட்டால் தமிழகத்தில் நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், தென்காசி, கோவை, நெல்லை, குமரி, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை பொழியும் இடங்கள்:

டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை எப்போதும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலும் நீடிக்கும். ஆனால் இந்தாண்டு மழை காலம் முடிந்து கோடைகாலமே ஆரம்பமாகியுள்ளது. இருப்பினும் அவ்வப்போது மேக மூட்டத்துடனே குளிர்ச்சியான சூழலே நிலவி வருகிறது. திடீரென வெயிலும் கொளுத்தி வருகிறது. இந்த சூட்டை தணிக்கும் வகையில் அவ்வப்போது சில இடங்களில் மழை பொலிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – எதையெல்லாம் அப்டேட் செய்யலாம்? முழு விவரங்கள் இதோ!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் கடந்தவாரம் வரை தென்மாவட்டங்களுக்கு மிதமான மழை பொலிந்து வந்தது. தற்போதும் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாட்டால் தமிழ்நாட்டில் மட்டுமே 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் சம்பத் அறிவித்துள்ளார்.

தமிழக அரசு சார்பில் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை – ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர் விருது அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், தென்காசி, கோவை, நெல்லை, குமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் நாளை திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக என்று வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடுமையான வெயிலுக்கு நடுவே அவ்வப்போது மழை பொலிந்து வருவதால் சாலையோரங்களில் கடை வைத்திருப்பவர்கள் என பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here