டிச 23ல் கால்நடை மருத்துவபடிப்பு கலந்தாய்வு தொடக்கம்!!

0
டிச 23ல் கால்நடை மருத்துவபடிப்பு கலந்தாய்வு தொடக்கம்!!
டிச 23ல் கால்நடை மருத்துவபடிப்பு கலந்தாய்வு தொடக்கம்!!

டிச 23ல் கால்நடை மருத்துவபடிப்பு கலந்தாய்வு தொடக்கம்!!

கால்நடை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு 23ம் தேதி முதல் தொடங்குகிறது. சிறப்பு பிரிவினருக்கு 23ம் தேதி கலந்தாய்வு கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெறும். பொதுப்பிரிவினருக்கு ஆன்லைனில் நடைபெறும்.

கால்நடை மருத்துவ படிப்பு கலந்தாய்வு

பொது மருத்துவருக்கான எம்பிபிஎஸ் கலந்தாய்வுகள் முடிந்த நிலையில் கால்நடை மருத்துவருக்கான கால்நடை மருத்துவ படிப்பு கலந்தாய்வு டிசம்பர் 23ம் தேதி முதல் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமணையில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் மருத்துவக்கல்லுரிகள் செயல்படுகிறது. இந்த கல்லூரிகளில் 5அரை ஆண்டுகள் மற்றும் 4 ஆண்டுகள் படிக்கும் பி.வி.எஸ்சி – ஏ.ஹெச் எனும் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு  மற்றும் பி.டெக் பிரிவுகளான உணவுத்தொழில் நுட்ப பட்டப்படிப்பு, பால்வளத்தொழில் நுட்ப பட்டப்படிப்பு, கோழியின தொழில் நுட்ப பட்டப்படிப்பு உள்ளிட்ட தொழில் நுட்ப பட்டப்படிப்புகள் உள்ளன.

புதிதாக இந்த வருடம் சேலத்தில் தலைவாசல் தேனியில் வீரபாண்டி, உடுமலைப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் 40 இடங்களுடன் 3 கல்லூரிகள் செயல்படுகின்றன. பன்னிரண்டாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களின் தரவரிசை பட்டியலின் அடிப்படையில்  இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது.

சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 23ம் தேதி தொடங்குகிறது. சிறப்பு பிரிவில் மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், ராணுவவீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் போன்றோர் அடங்குவர்.

கால்நடை படிப்பிற்கான கலந்தாய்வு தரவரிசை பட்டியல் 19ம் தேதி வெளியிடப்பட்டது. பொதுப் பிரிவு, இடஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடக்கவிருக்கிறது. கலந்தாய்விற்க்கான பல்கலைக்கழக இணையதளங்கள் www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in

வேலைவாய்ப்பு செய்திகள்

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!