தமிழகத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து,கணக்கியல் தேர்வுகள் – தேர்வு அட்டவணை வெளியீடு!!

0
தமிழகத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து,கணக்கியல் தேர்வுகள் - தேர்வு அட்டவணை வெளியீடு!!
தமிழகத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து,கணக்கியல் தேர்வுகள் - தேர்வு அட்டவணை வெளியீடு!!
தமிழகத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து,கணக்கியல் தேர்வுகள் – தேர்வு அட்டவணை வெளியீடு!!

தமிழகத்தில் உள்ள வணிகவியல் பயிலகங்களில் நடத்தப்படும் தேர்வுகளுக்கான தேதிகளை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுகள் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிகவியல் தேர்வுகள்:

தொழிநுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் தமிழகத்தில் மொத்தம் 3500க்கு மேற்பட்ட வணிகவியல் பயிலகங்கள் (தட்டெழுத்து மற்றும் சுருக்கெழுத்து) செயல்பட்டு வருகின்றன. பொதுவாக இந்த தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும். 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் படிப்புகளுக்கான தேர்வுகள் நடத்தப்படவில்லை.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் தற்போது அந்த படிப்புகளுக்கான தேர்வுகான அட்டவணையை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் இந்த தேர்வுகள் தொடங்கப்பட்டு ஏப்ரல் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தட்டச்சு ஜுனியர் கிரேடு தேர்வுகள் 5 பேட்ச்களாகவும், சீனியர் கிரேடு தேர்வுகள் 4 பேட்ச்களாகவும் நடத்தப்படுகிறது.

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு?? – பிரதமர் மோடி இன்று ஆலோசனை!!

இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் மாதம் 26 ஆம் தேதி கடைசி தேதி ஆகும். இந்த விண்ணப்பங்களை http://www.tndte.gov.in/ என்ற தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். என தொழில்நுட்பத் தேர்வுகள் தேர்வு வாரியத்தின் தலைவரும், மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநருமான கே.விவேகானந்தன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here