தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள தேதி மாற்றம் – அதிருப்தியில் பணியாளர்கள்!!
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் தேதிகளில் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
சம்பள தேதி அறிவிப்பு:
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் மாநகர போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம் போக்குவரத்து கழகம் போன்ற பிரிவுகளில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு வழக்கமாக மாத கடைசியில் சம்பளம் வழங்கப்படும். மேலும் கும்பகோணம், மதுரை, நெல்லை, சேலம் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள போக்குவரத்து கழகங்களில் மாத கடைசி தேதியிலோ, அல்லது மாதத்தின் முதல் தேதியிலோ சம்பளம் வழங்கப்படும்.
TN Job “FB
Group” Join Now
மாதத்தில் முதல் நாள் விடுமுறை என்றால் அடுத்த நாள் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மேற்கூறிய மாவட்டங்களில் உள்ள போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து வரும் உயர் அதிகாரிகள் முடிவு செய்யும் தேதிகளில் தான் சம்பளம் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய போக்குவரத்து துறை பணியாளர்கள் கூறுகையில்,
தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு – DEO உத்தரவு!!
“அரசு போக்குவரத்து கழகங்களில் இப்படி மாறி மாறி சம்பளம் வழங்குவதால் தங்களுக்கு பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே பழைய முறைப்படி சரியான நேரத்தில் சம்பள தொகையை வழங்க வேண்டும்”, இவ்வாறு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே போக்குவரத்து துறை ஊழியர்கள், தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.