தமிழக அரசு சார்பில் 3 நாள் கோடைகால சுற்றுலா – சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவிப்பு!!

0
தமிழக அரசு சார்பில் 3 நாள் கோடைகால சுற்றுலா - சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவிப்பு!!
தமிழக அரசு சார்பில் 3 நாள் கோடைகால சுற்றுலா - சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவிப்பு!!
தமிழக அரசு சார்பில் 3 நாள் கோடைகால சுற்றுலா – சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவிப்பு!!

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தை முன்னிட்டு சுற்றுலா ஏற்பாடு செய்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான சுற்றுலா தளமாக ஊட்டி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்:

தமிழகத்தில் ஆண்டுதோறும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களில் கோடைகால சுற்றுலா தளங்களுக்கு அழைத்து செல்வது வழக்கம். இந்த ஆண்டும் 3 நாள் சுற்றுலா பயணமாக ஊட்டி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு பகுதிகளுக்கு அழைத்து செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, சுற்றுலா தளங்கள் மற்றும் அதற்கான விவரங்கள் பின்வருமாறு,

TN Job “FB  Group” Join Now

ஊட்டி:

ஊட்டியில் தாவரவியல் பூங்கா, படகு சவாரி, ரோஜா தோட்டம் சுற்றி காட்டப்படும். இதற்கான தனி அறை மற்றும் பயண கட்டணமாக ரூ.5200, இருவர் பகிரும் அறைகளுக்கு கட்டணமாக ரூ.4500 மற்றும் சிறியவர்களுக்கு கட்டணமாக ரூ.4100 வசூலிக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள உபரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதல் – உயர் நீதிமன்றம் உத்தரவு!!

கொடைக்கானல்:

கொடைக்கானலில் தூண் பாறை, பசுமை சமவெளி கண்டுகளித்தல், கோக்கர்ஸ் நடை படகு சவாரி, வெள்ளிநீர் வீழ்ச்சி போன்றவை காண்பிக்கப்படும். அதற்கான கட்டணமாக தனி அறை வேண்டியவர்களுக்கு ரூ.5250 வசூலிக்கப்படும். இருவர் பகிரும் அறைக்கு ரூ.4500 வசூலிக்கப்படும், சிறியவர்களுக்கான கட்டணமாக ரூ.4100 வசூலிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் – தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவு!!

ஏற்காடு – ஒக்கேனக்கல்:

ஏற்காடு – ஒக்கேனக்கல் பகுதிகளில் உள்ள ஜென் சீட், லேடீஸ் சீட், பகோடா பாய்ன்ட், ரோஜா தோட்டம், படகு சவாரி, ஒகேனக்கல்- நீர் வீழ்ச்சி போன்றவை காண்பிக்கப்படும். தனி அறை வேண்டியவர்களுக்கான கட்டணமாக ரூ.4750 வசூலிக்கப்படும். இருவர் பகிரும் அறைக்கு ரூ.4250, சிறியவர்களுக்கான கட்டணமாக ரூ.3800 வசூலிக்கப்பட உள்ளது.

புதிய கல்வியாண்டு துவக்கம் – பள்ளிகளில் மாணவர் வருகை இல்லை!!

ஒரு குழுவிற்கு 30 பேர் சேரும் பட்சத்தில் அனைத்து நாட்களிலும் கோடை சுற்றுலா இயக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு, மேலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், சுற்றுலா வளாகம், 2, வாலாஜா சாலை, சென்னை -2 என்ற முகவரியை அணுகலாம் அல்லது 1800-42531111 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அணுகலாம்.

கூடுதல் விவரங்களுக்கு தொலைபேசி: 044-25333333/ 25333444/ 25333850-54. இதற்கான முன்பதிவு செய்ய www.ttdconline.com என்ற இணையதள முகவரியை காணலாம். மேலும் தகவல்களை பின்வரும் மின்னஞ்சல் முகவரி மூலமாக பெறலாம் [email protected], அல்லது இணையதள முகவரி www.tamilnadutourism.org, கைபேசி முன்பதிவுக்கு www.mttdonline.com இணையதள பக்கத்தை காணலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!