தமிழக மீனவர்களுக்கு வந்த எச்சரிக்கை அறிவிப்பு – அதிவேகத்தில் சூறாவளிக்காற்று வீசும்!

0
தமிழக மீனவர்களுக்கு வந்த எச்சரிக்கை அறிவிப்பு - அதிவேகத்தில் சூறாவளிக்காற்று வீசும்!

சென்னை வானிலை ஆய்வு மையமானது அடுத்து வரும் நாட்களுக்கான தமிழகத்தின் வானிலை நிலவரம் குறித்த அறிவிப்புகளை அறிக்கையாக இன்று வெளியிட்டுள்ளது.

வானிலை அறிக்கை:

கடந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மட்டும் மழைபொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று முதல் 23ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இதை தவிர மற்ற பகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வீட்டிலே இருந்தே படித்து அரசு வேலை வாங்கலாம்.. அது எப்படி? – உடனே பாருங்க!

வெப்ப அலையின் காரணமாக இன்று தமிழகத்தில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும். மேலும் கர்நாடகா கடலோர பகுதிகள் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 55 கிலோமீட்டர் வேகம் வரை இன்று வீசக் கூடும். எனவே தமிழக மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!