11 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை அறிக்கை!
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மிதிலி புயல் ஆனது நேற்று வங்கதேச கடற்கரையில் கரையை கடந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கான வானிலை அறிக்கை தற்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது நிலவி வருகிறது. இதனால் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்திலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இதைத் தவிர மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.1000 ஊதிய உயர்வு – அரசு அறிவிப்பு!
தமிழகத்திற்கான கனமழை எச்சரிக்கை நவம்பர் 22ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்றைய வானிலை அறிக்கையில் மீனவர்களுக்கான எச்சரிக்கை தகவல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.