தமிழகத்தில் நாளை ( டிச.4) திரைப்பட காட்சிகள் ரத்து? – மிக்ஜாம் புயல் எதிரொலி!

0
தமிழகத்தில் நாளை ( டிச.4) திரைப்பட காட்சிகள் ரத்து? – மிக்ஜாம் புயல் எதிரொலி!

தமிழகத்தில் நாளை ஒரு நாள் திரைப்பட காட்சிகள் ரத்து செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் தற்போது நடந்து வருகிறது.

புயல் எதிரொலி:

தமிழகத்தை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் புதிதாக உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தற்போது ‘மிக் ஜாம்’ புயலாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தை நோக்கி புயல் தற்போது ஒன்பது கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கடும் மழை காரணமாக பாதிப்புகள் நிலவி வருகிறது. இதற்காக தமிழக அரசு தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல் ? – செவி சாய்க்குமா அரசு!

பாதுகாப்பு பணிகளின் காரணமாக நாளை நான்கு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மிக் ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிசம்பர் 4 திங்கட்கிழமை நாளை ஒரு நாள் சென்னையில் திரைப்பட காட்சிகள் ரத்து செய்வது தொடர்பாக திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் தற்போது ஆலோசனை செய்து வருகின்றனர். தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் இன்று இரவு அதிகனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!