தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு – வலிமை ரிலீஸ் விரைவில்!
தமிழகத்தில் ஆகஸ்ட் 23ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் வலிமை படம் திரைக்கு வர இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வலிமை ரிலீஸ்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலையின் காரணமாக கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பல செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்கள் மே 10ம் தேதி முதல் மூடப்பட்டிருந்தது. இதனால் முழுதாக படப்பிடிப்புகள் முடிந்து திரைக்கு வெளியாக வேண்டிய பல படங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஆயுத எழுத்து ஹீரோ இப்போ ஜீ தமிழில் – புதிய சீரியல் ஆரம்பம்!
இதனால் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் தமிழக அரசுக்கு பல முறை திரையரங்கத்தை மீண்டும் திறக்க கோரிக்கை வைத்து வந்தது. திரைக்கு வர வேண்டிய படங்கள் காத்திருக்கும் சூழ்நிலையால் தயாரிப்பாளர்களுக்கு கடக்கும் நஷ்டம் எழும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், இன்று தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை செப்டம்பர் 6ம் தேதி வரை நீடித்துள்ளது. இதனால் ஆகஸ்ட் 23ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
அரசின் இந்த அறிவிப்பினால் காத்திருக்கும் பல படங்கள் திரைக்கு வரும் என்று தெரிகிறது. இந்நிலையில், ஆயுத பூஜைக்கு ரிலீசாகும் என்று படக்குழுவினர் அறிவித்த வலிமை படம் குறித்த போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்து வரும் நிலையில், விரைவில் படக்குழுவினர் நாடு திரும்ப உள்ளனர். அதன் பிறகு, படம் ரிலீசாகும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.