தமிழகத்தில் உள்ள அறநிலையத்துறை கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

0
தமிழகத்தில் உள்ள அறநிலையத்துறை கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அறநிலையத்துறை கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தமிழக அரசின் அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோவில்களில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

அர்ச்சகர்கள் நியமனம்

தமிழகத்தில் இந்து திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட தனித்துறை இந்து சமய அறநிலையத்துறை ஆகும். அந்த வகையில் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை கடந்த 1960ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு அலுவலகம் சென்னை தலைமைச் செயலகத்தில் இயங்கி வருகிறது. இந்த அறநிலையத்துறை மூலம் கோவில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தவிர இந்து சமய திருக்கோயில்களின் வீடுகள், நிலங்கள் ஆகியவற்றை நிர்ணயம் செய்தல், கோயில் பராமரிப்பு, கோயில் சொத்துகளைப் பாதுகாத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் ஆகியவையும் இந்து சமய அறநிலையத் துறையின் முக்கியமான கடமைகள் ஆகும். அந்த வகையில் இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோவில்களில் அர்ச்சகராக பணிபுரிபவர்களுக்கு அரசு சார்பில் ஆட்சேர்ப்பு செய்யப்படுவது வழக்கம்.

தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – ரூ. 7000 உதவித்தொகை! விண்ணப்பங்கள் வரவேற்பு!

இதற்கிடையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில் அர்ச்சகர்களை நியமனம் செய்வது தொடர்பான அறிவிப்புகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இனி இந்து அறநிலையத்துறை கோவில்களில் அர்ச்சகர்களை நிர்ணயம் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!