தமிழகத்தில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பிப்.13க்குள் நிரப்பப்படும் – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!!

2
தமிழகத்தில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பிப்.13க்குள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!!
தமிழகத்தில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பிப்.13க்குள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!!
தமிழகத்தில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பிப்.13க்குள் நிரப்பப்படும் – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!!

தமிழகத்தில் ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பாக வழக்கு தொடர்ந்தவர்கள் ஒத்துழைத்தால் பிப்ரவரி 13ம் தேதிக்குள் பட்டியல் வெளியிடப்பட்டு காலியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

ஆசிரியர் தேர்வு வாரியம்:

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் கடந்த ஜனவரி 19 முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் மீண்டும் திறக்கப்பட்டன. நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் அதிகளவிலான மாணவர்கள் சேர்ந்துள்ளதால் ஆசிரியர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் கணக்கெடுக்கும் பணியும் தொடங்கி உள்ளது. இதற்கிடையில் வரும் பிப்ரவரி 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறந்து நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி இலவச டேட்டா திட்டம் – முதல்வர் துவக்கி வைப்பு!!

இன்று சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், மற்ற மாநிலத்தவர்கள் தமிழகத்தில் தான் கல்விமுறை சிறப்பாக உள்ளதாக கூறி உள்ளதாக தெரிவித்தார். அரசுப்பள்ளிகளில் தனியார் பள்ளிகளை போன்று ஷூ, ஷாக்ஸ் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. பள்ளிகளில் 742 அடல் டிங்கரிங் லேப் திட்டம் அடுத்த மாத இறுதிக்குள் செயல்படுத்தப்படும். மேலும் 80 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள், 7500 ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்க மத்திய அமைச்சகத்துடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

தமிழக அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டு உள்ளது. தற்போது உள்ள 7,100 உபரி ஆசிரியர்களை காலிப்பணியிடங்களில் பணியமர்த்தாமல் விட்டால் அரசுக்கு ரூ.1,400 கோடி நிதிச்சுமை ஏற்படும். நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக ஆசிரியர் நியமனம் தாமதமாகி உள்ளது. எனவே வழக்கு தொடர்ந்து உள்ளவர்கள் உரிய ஒத்துழைப்பு வழங்கினால் காலிப்பணியிடங்கள் பிப்ரவரி 13ம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பட்டியல் வெளியிடப்பட்டு நிரப்பப்படும் என அமைச்சர் கூறினார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. Now the school opening is not a correct thing because the parents are also in danger situation about their jobs they have not a permanent job after election they open school opening is the correct thing that is orginal dmk or admk

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!