தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு ரத்து? மனு தள்ளுபடி!

3
தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு ரத்து? மனு தள்ளுபடி!
தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு ரத்து? மனு தள்ளுபடி!
தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு ரத்து? மனு தள்ளுபடி!

கொரோனா காரணமாக ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதை ரத்து செய்ய கோரி ராம்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து இன்று உத்தரவு பிறப்பித்து உள்ளது.

ஞாயிற்று கிழமை ஊரடங்கு:

தமிழகத்தில் கடந்த ஒரு வருடமாக கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. கொரோனா சற்று குறைந்த பின் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை தடுக்க அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கிருமி நாசினி பயன்படுத்தவும், முகக்கவசம் அணியவும் அரசு மக்களை வலியுறுத்துகிறது. விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது.

கடன் தவணைகளை (EMI) வசூலிக்க ஓராண்டு கால அவகாசம் – அரசுக்கு கோரிக்கை!

இதனை தொடர்ந்து மக்கள் கூடுவதை தவிர்க்க இரவு நேர ஊரடங்கு வார இறுதி தினங்களில் முழு ஊரடங்கு போன்றவை பிறப்பிக்கப்பட்டது. நோய் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அவசியம் என சுகாதாரத்துறை வலியுறுத்துகிறது. தமிழகத்தில் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் மூலம் மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க முடிகிறது.

TN Job “FB  Group” Join Now

வழக்கத்தில் உள்ள இந்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த தொடர் ஞாயிற்று கிழமை ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை ஆராய்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!