தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பு!

0
தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை - மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பு!
தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை - மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பு!
தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பு!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவர்கள் அடுத்த ஆண்டிற்கான புதிய கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார் .

உதவித்தொகை :

தமிழக அரசால், அரசு பள்ளி, கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் இதர சீர்மரபினை சேர்ந்த மாணவ, மாணவிகளின் நலனுக்காக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக மாணவர்கள் அடுத்த 2023 ம் ஆண்டிற்கான புதிய கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க கோரி விருதுநகர் ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாத ரெட்டி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் .

Follow our Instagram for more Latest Updates

அதாவது மத்திய கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், என் ஐ டி போன்றவற்றில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவியர்கள் இந்த கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு விண்ணப்பிப்பவர்கள் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 2. 50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான உரிய விண்ணப்பம் https: //bcmbcmw.tn.gov. in/welf schemes. htm#scholarshipschemes என்ற தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

வானிலை அலர்ட்.. தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை – அறிக்கை வெளியீடு!

Exams Daily Mobile App Download

முறையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் சமர்ப்பித்த பிறகு, அந்தந்த கல்வி நிறுவனங்கள் வரும் ஜனவரி 31 க்குள் ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!