தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை 1 முதல் துவக்கம் – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை 1 முதல் துவக்கம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை 1 முதல் துவக்கம் – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

விழுப்புரம் – காட்பாடி – திருப்பதி இடையிலான ரயில் விரைவு ரயிலாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில் சேவைகள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில் சேவைகள்:

இந்தியாவில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மீண்டும் அனைத்து ரயில் சேவைகளும் துவங்கப்பட்டன. இந்நிலையில், பல நாட்களாகவே விழுப்புரம் – காட்பாடி – திருப்பதி இடையிலான ரயில் விரைவு ரயிலாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. பொது மக்களின் கோரிக்கையை ஏற்று விழுப்புரம் – காட்பாடி – திருப்பதி இடையிலான ரயில்களை விரைவு ரயிலாக மாற்ற தெற்கு ரயில்வே அனுமதித்துள்ளது. மேலும், ஜூலை 1-ஆம் தேதி முதல் விரைவு ரயிலாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்று முதல் ஜூலை 10 வரை 144 தடை உத்தரவு – காவல் துறை அறிவிப்பு!

இதனை தொடர்ந்து திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பதால் பக்தா்களின் வசதிக்காக இந்த ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். மேலும், வேலூர் சிகிச்சைக்காகவும், பணியின் காரணமாக வெளியூர்களுக்கு செல்ல இருக்கும் பயணிகளுக்காகவும் மீண்டும் ரயில் சேவைகளை துவங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் முதல் திருப்பதிக்கு செல்லும் விரைவு ரயிலானது தினமும் மாலை 5.20 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு காட்பாடி பகுதிக்கு இரவு 8.45 மணிக்கு வந்தடையும்.

பின்னா், காட்பாடி பகுதியில் இருந்து புறப்பட்டு திருப்பதிக்கு இரவு 11 மணிக்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருப்பதி முதல் காட்பாடிக்கு செல்லும் விரைவு ரயிலானது அதிகாலை 2.35 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்பட்டு காட்பாடிக்கு காலை 4.55 மணிக்கு வந்து வந்தடையும். காட்பாடி முதல் விழுப்புரத்திற்கு செல்லும் விரைவு ரயிலானது காட்பாடி பகுதியில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரத்துக்கு காலை 10.45 மணிக்கு வந்தடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here