சுயநிதி கல்லூரிகளில் BDS படிப்புகளுக்கான கலந்தாய்வு – இன்று முதல் தொடக்கம்!!

0
சுயநிதி கல்லூரிகளில் BDS படிப்புகளுக்கான கலந்தாய்வு - இன்று முதல் தொடக்கம்!!
சுயநிதி கல்லூரிகளில் BDS படிப்புகளுக்கான கலந்தாய்வு - இன்று முதல் தொடக்கம்!!
சுயநிதி கல்லூரிகளில் BDS படிப்புகளுக்கான கலந்தாய்வு – இன்று முதல் தொடக்கம்!!

தமிழகத்தில் உள்ள சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் பல் மருத்துவருக்கான மாணவர் சேர்க்கை (BDS) கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியது.

பல் மருத்துவ கலந்தாய்வு:

தமிழகத்தில் உள்ள மொத்தம் 1860 பல் மருத்துவ இடங்களில் 279 இடங்கள் மத்திய அரசு இடங்களாக ஒதுக்கப்பட்டு மத்திய அரசு மூலம் நிரப்பப்படுகிறது. 1667 இடங்கள் மாநில அரசு மூலம் நிரப்பப்படுகிறது. மொத்தமுள்ள 1860 இடங்களில் 100 மட்டும் அரசு கல்லூரியிலும், மற்றவை தனியார் சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ளன. இந்த கல்லூரிகளில் BDS படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது.

ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் விரைவில் அமல் – அரசு சார்பு செயலாளர் தகவல்!!

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் இன்று முதல் பல் மருத்துவருக்கான மாணவர் சேர்க்கை வழங்க கலந்தாய்வு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் இந்த கலந்தாய்வில் இன்று காலை முதல் அரசு இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வும், பிற்பகல் முதல் சுயநிதி இடஒதுக்கீடுக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது. இந்த மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை சான்றிதழ் சரிபார்ப்பு பின் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!