தமிழகத்தில் மார்ச் மாதம் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை தகவல்!!

5
தமிழகத்தில் மார்ச் மாதம் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை தகவல்!!
தமிழகத்தில் மார்ச் மாதம் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை தகவல்!!

தமிழ்நாட்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது வெளிவந்த தகவல்களின் படி, மார்ச் மாதத்திலிருந்து 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு அரசாங்கம் பள்ளிகளைத் திறந்து நேரடி வகுப்புகளை தொடங்கும் என கூறப்படுகிறது.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அனைத்து பாடங்களுக்கும் பாடத்திட்டத்தில் 50 சதவீதம் குறைப்பு என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலைமையை அதிகாரிகள் மற்றும் பல சுகாதார வல்லுநர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்நிறுவனங்களில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதை பள்ளிக்கல்வித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.

தமிழகத்தில் ஆசிரியர் காலிப்பணியிட தேர்வு அட்டவணை – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

மாவட்ட கல்வி முதன்மை அதிகாரிகள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து நடுநிலைப் பள்ளிகளுக்கும் நேரில் வருகை புரிந்து ஆய்வு செய்து, அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றி அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்களைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்த உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

சுகாதாரத்துறை அதிகாரிகள் சானிடைசர்கள், வைட்டமின் மாத்திரைகள் மற்றும் உடல் வெப்பத்தை அளவிடும் கருவிகள் போன்றவற்றை பள்ளிகளுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் 10,000 நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்புகளைச் சேர்ந்த 33 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். சமூக இடைவெளி விதிமுறைகள் காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் வகுப்பறையில் இடமளிக்க முடியாவிட்டால் ஷிப்ட் முறை பின்பற்றப்படும். பள்ளிகளில் இருக்கும் நூலகங்கள், ஆய்வகங்கள், ஆடிட்டோரியங்கள் வகுப்பறைகளாக மாற்றப்பட்டு இது தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

  1. Please allow school for 6 to 8 std students because we have to see our friends and teachers so please keep the school for 6to 8 std only please

  2. What is the use opening the schools only for 2 months?. You can’t say that after reopened, all the schools will be running on without summer holidays. Because during curfew, there was no freedom to move everywhere.so people will be expecting their schedules to do freely in the month of May. My opinion is better to open the schools in the month of June.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!