தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – மாணவர்கள் கோரிக்கை!!

0
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை - மாணவர்கள் கோரிக்கை!!
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை - மாணவர்கள் கோரிக்கை!!
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – மாணவர்கள் கோரிக்கை!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை குறித்த அறிவிப்பினை பள்ளிக் கல்வித்துறை விரைந்து அறிவிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோடை விடுமுறை:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த வருட மார்ச் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால் பாடங்கள் அனைத்தும் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி என பல வழிமுறைகளில் நடத்தப்பட்டன. பின்னர் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜனவரி 19 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால் மாணவர்களும் ஆர்வத்துடன் வகுப்புகளில் கலந்து கொண்டு வந்தனர்.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!!

இந்நிலையில் கொரோனா 2வது அலை பரவத் தொடங்கியதால் மீண்டும் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை பணிகளை தொடங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மே 5 முதல் 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் செய்து வருகிறது. தற்போது 1 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

வழக்கமாக மே மாதம் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு ஜூன் மாத முதல் வாரத்தில் மீண்டும் வகுப்புகள் தொடங்கப்படும். ஆனால் இம்முறை கொரோனா பரவலால் பள்ளிகள் திறப்பில் சிக்கல் நிலவுகிறது. புதுச்சேரியில் ஏப்ரல் 1 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அது குறித்து தற்போது வரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. இதனால் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை குறித்த அறிவிப்பை விரைந்து வெளியிட வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!