தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களின் பரிந்துரைகள் – இன்று சமர்ப்பிக்க உத்தரவு!!

1
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களின் பரிந்துரைகள் - இன்று சமர்ப்பிக்க உத்தரவு!!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களின் பரிந்துரைகள் - இன்று சமர்ப்பிக்க உத்தரவு!!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களின் பரிந்துரைகள் – இன்று சமர்ப்பிக்க உத்தரவு!!

தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்கள் கருத்து கேட்பு கூட்டம் நடந்து வரும் நிலையில், பெற்றோர்களின் கருத்து அறிக்கை தொகுப்பு தயாரித்து அனைத்து பள்ளி முதன்மை அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறையிடம் இன்று அனுப்பி வைக்க வேண்டும். பள்ளிகளில் இருந்து அறிக்கை பெற்று பள்ளிக்கல்வித்துறை தமிழக அரசிடம் தாக்கல் செய்ய உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பது குறித்த அறிக்கை:

தமிழகத்தில் பள்ளிகள் கொரோனா காரணமாக மூடப்பட்டு 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது பரவல் கட்டுக்குள் கொண்டு வந்து இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்க ஆலோசனை வழங்கப்பட்டது.

அரசின் உத்தரவை மீறி நேரடி வகுப்புகள் நடத்தும் கல்லூரிகள் – உயர்கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை!!

அதற்கான பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர்கள் அளித்த கருத்து குறித்து தொகுப்பினை அந்தந்த பள்ளி முதன்மை அலுவலர்கள் தயார் செய்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டது. இந்த கருத்து தொகுப்பு இன்று அனைத்து பள்ளிகளில் இருந்தும் பெறப்பட்டு தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும் – பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!!

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பில்,”இன்று நண்பகலுக்குள் மாவட்டங்களில் இருந்து அறிக்கைகள் முழுமையாக வரவில்லை என்றால் வருகிற 11-ஆம் தேதி தமிழக அரசிடம் தொகுப்பு தாக்கல் செய்யப்படும்” என  தெரிவித்தனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

 1. New virus is coming now
  You think about children’s health and say
  Yours comments
  In Andhra Pradesh the teachers have affected by corona in 5th day of class so
  I too one teacher so please don’t open school now
  If you think to open school
  First think about your children and open
  I too have a daughter
  I had care with her

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!