தமிழகத்தில் பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு – இனி 6 நாட்களும் வேலை நாள்!
தமிழகத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு வேலை நாள் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
பள்ளிகளுக்கு அறிவிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருப்பதால் கடந்த வாரம் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் இந்த வாரம் மழை சற்று குறைந்துள்ளது. தீபாவளி பண்டிகை விடுமுறை நாளை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, இன்று (நவ. 14) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை – தெற்கு ரயில்வே தகவல்!
இந்நிலையில் மழைக்கால விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக சனிக்கிழமைதோறும் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்துவது குறித்து அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் முடிவு செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.