தமிழகத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை வழங்க வேண்டும் – ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை!!

0
தமிழகத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை வழங்க வேண்டும் - ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை!!
தமிழகத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை வழங்க வேண்டும் - ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை!!
தமிழகத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை வழங்க வேண்டும் – ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் வாரத்தில் 6 நாட்கள் சனிக்கிழமை உட்பட நடைபெற உள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆசிரியர்கள் கோரிக்கை:

தமிழகத்தில் கொரோனா காரணமாக 10 மாதங்களாக பள்ளிகள் கொரோனா காரணமாக மூடப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் ஜனவரி மாதம் 19 ஆம் தேதியும், 9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் மாணவர்களுக்கு 10 மாதங்களாக ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டதால் பல பாடங்கள் நடத்த முடியாமல் இருந்தது இதனை கருத்தில் கொண்டு அரசு வாரத்தில் 6 நாட்கள் சனிக்கிழமை உட்பட வகுப்புகள் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. இந்த அறிவிப்பின் படி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

மார்ச் 9 குமரியில் உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

இது தொடர்பாக தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் கேபிஓ சுரேஷ் கூறுகையில்,” கொரோனா காலத்தில் பள்ளிகள் பல மாதங்களாக திறக்கப்படாத காரணத்தால் மாணவர்களின் படிப்பு மீது அக்கறை காரணமாக ஆசிரியர்கள் முழு ஈடுபாடுடன் பணியாற்றி வருகின்றன. ஆனால் அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகள் நடைபெறுவதால் மாணவர்களின் வருகை குறைந்துள்ளது.

ஐசிஎஸ்இ 10 & 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு – ஏப்ரல் 8 & மே 12 முதல் தொடக்கம்!!

வகுப்புகளில் 25 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதால் ஆசிரியர்களின் வேலை அதிகமாக உள்ளது. சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் அடுத்த வாரம் முதல் ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டியுள்ளது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கட்டணம் – மார்ச் 5 கடைசி நாள்!!

அதனால் வாரம் முழுவதும் பணிபுரிய வேண்டியுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலும், உடல் சோர்வும் அடைந்துள்ளனர். எனவே இந்த அறிவிப்பை மாற்றி அரசு அறிவிக்க வேண்டும்”, இவ்வாறு தெரிவித்தனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here