தமிழகத்தில் 1 முதல் 8 வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு – தனியார் பள்ளிகள் கோரிக்கை!!

2
தமிழகத்தில் 1 முதல் 8 வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு - தனியார் பள்ளிகள் கோரிக்கை!!
தமிழகத்தில் 1 முதல் 8 வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு - தனியார் பள்ளிகள் கோரிக்கை!!
தமிழகத்தில் 1 முதல் 8 வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு – தனியார் பள்ளிகள் கோரிக்கை!!

தமிழகத்தில் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்தது குறித்து வெளியான அறிவிப்பு எதிர்ப்பு தெரிவித்து இன்று சென்னையில் தனியார் பள்ளிகள் நிர்வாகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் விரைவில் பள்ளிகளை திறக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது. பிற வகுப்பு மாணவர்கள் ஆன்லைனில் பயின்று வருகின்றனர். இதற்கிடையில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் தொடரில் 100வது விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

முதுகலை மாணவர்களுக்கான உதவித்தொகை – ஏஐசிடிஇ அறிவிப்பு!!

அதில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக அதிகரிப்பு மற்றும் 9 முதல் 11ம் வகுப்பு வரை ‘தேர்வின்றி தேர்ச்சி’ ஆகியவை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இவ்விரு அறிவிப்புகளுக்கும் பலரது மத்தியில் வரவேற்பு கிடைத்தாலும், சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பள்ளிகளில் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சங்கம் சார்பில் சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

TN Job “FB  Group” Join Now

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழகத்தில் 11 மாதங்கங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில், 1 முதல் 8 வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆல்பாஸ் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்த தனியார் பள்ளிகள் சங்கத்தினர், இக்கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் மாவட்ட அளவில் திங்கட்கிழமை போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. The private sector schools are looking for money only. If not open the school they are not able to collect the fee ( money )
    So that they are compel to open the school from 1 std to 8std.
    They are only money minded people.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!