தமிழகத்தில் ஜனவரி 18-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – விரைவில் அறிவிப்பு வெளியீடு!!

7
தமிழகத்தில் ஜனவரி 18-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு-விரைவில் அறிவிப்பு வெளியீடு!!
தமிழகத்தில் ஜனவரி 18-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு-விரைவில் அறிவிப்பு வெளியீடு!!
தமிழகத்தில் ஜனவரி 18-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – விரைவில் அறிவிப்பு வெளியீடு!!

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. 10,11,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்க பெற்றோர்கள் கருத்து கேட்பு கூட்டம் இன்று முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 18-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும், இதற்கான அதிகாரபூர்வ தகவல் விரைவில் முதல்வர் வெளியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் மாதம் 9-ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில் பள்ளிகள் திறக்க அதிகப்படியான மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – இன்று முதல் கருத்துக்கேட்பு கூட்டம்!!

தற்போது 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில் பள்ளிகள் திறக்க இரண்டாம் கட்ட பெற்றோர்கள் கருத்து கேட்பு இன்று முதல் வருகிற 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற கருத்து கேட்பின் படி தமிழகத்தில் 10,11, மற்றும் 12 வகுப்புகளுக்கான பள்ளிகள் வருகிற 18-ஆம் தேதி திறக்கப்படும் எனவும், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை முதல்வர் விரைவில் வெளியிடுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!